ஒரே ட்விட் மொத்த மானமும் போச்சு! பாஜகவால் கதறும் திமுக!

Photo of author

By Sakthi

ஒரே ட்விட் மொத்த மானமும் போச்சு! பாஜகவால் கதறும் திமுக!

Sakthi

Updated on:

தன்னுடைய அரசியல் அதிகாரத்திற்காக வெட்கமே இல்லாமல் தூற்றுவதும், மலிவான சந்தரபாத அரசியலை செய்தது, செய்து கொண்டிருப்பது, செய்யப்போவது திமுக தான் என்று பாஜகவின் மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இதுகுறித்து பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், தெரிவித்திருப்பதாவது முதலில் சர்தார் வல்லபாய் பட்டேல், அடுத்ததாக நேதாஜி, தற்போது பகத்சிங் பாஜக தலைமையானது  கபளீகரம் செய்து கொள்ளும் இந்தியா ஆளுமைகளின் பட்டியல் இது.

புரட்சியாளர்கள் மறைந்த பின்னர் அவருடைய எதிரிகளால் அவர்கள் கவலையறம் செய்யப்படுவார்கள் என்றார் லெனின். அதுதான் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்றைய முரசொலி என்று தெரிவித்துள்ளார் நாராயணன் திருப்பதி.

திமுகவை ஆரம்பித்த போது ஈவெ ராவை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்தவர்கள் அதன் பிறகு அவரை கொள்கை கொன்று என்று அழைத்த திமுக புடவை கட்டிய முசோலினி என்று இந்திரா காந்தியை விமர்சனம் செய்துவிட்டு நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக என்று உருகியது கருணாநிதி.

ராஜாஜியை அவதூறு செய்துவிட்டு அதன் பிறகு அவருடன் கூட்டணி வைத்து ஆட்சியைப் பிடித்த திமுக பெருந்தலைவர் காமராஜரை அண்டங்காக்கா என்று தரக்குறதாக விமர்சனம் செய்துவிட்டு அதன் பிறகு காமராஜருக்காக உருகிய வரலாறு கொண்ட திமுக.

என்னை கொலை செய்ய திட்டமிடுகிறார் வைகோ என்று தெரிவித்து விட்டு மறுபடியும் அரவணைத்தது திமுக, தமிழினத் துரோகிகளை கொலைகார பாவிகளே என்று தெரிவித்த வைகோவை சிறிதும் வெட்கப்படாமல் உண்மையான கதாநாயகன், போராளி என்றெல்லாம் புகழ்ந்தது திமுக.

கூடா நட்பு கேடாக முடியும் என்று அழுது புலம்பி விட்டு பின்பு மறுபடியும் காங்கிரஸ் கட்சியுடன் உறவு வைத்துக் கொண்டு கூத்தாடி கொண்டிருப்பது திமுக. பரதேசி பண்டாரம் என்று பாஜகவை வசை பாடிவிட்டு அதன் பிறகு வாஜ்பாயை வானளாவ புகழ்ந்த கருணாநிதி. யாரால் ஆபத்து என்று எழுதி கேட்டு மத்திய பாதுகாப்பு படையின் பாதுகாப்பை பெற்றார்களோ அவர்களையே ஆறத் தழுவி புளகாங்கிதமடைந்த திமுக.

இப்படி வாழ்ந்து கொண்டிருக்கும் போதே ஒருவரை தூற்றுவதும் அதன் பிறகு அரசியல் அதிகாரத்திற்காக வெட்கமே இல்லாமல் போற்றுவதுமான மலிவான சந்தர்ப்பவாத அரசியலை செய்தது, செய்து கொண்டிருப்பது, செய்யப் போவது திமுக தான் என்று தெரிவித்துள்ளார் நாராயணன் திருப்பதி.

பாஜகவை பொறுத்தவரையில் அந்த கட்சி எப்போதும் நேதாஜியோ, சர்தார் வல்லபாய் பட்டேலையோ, பகத்சிங்கையோ தூன்றியது இல்லை. மாறாக கொண்டாடிக் கொண்டே இருக்கிறோம்.

விரோதிகள் என்று அழைத்தவர்களை, துரோகிகள் என்று விமர்சனம் செய்தவர்களை அவர்கள் இருக்கும் போதே அரசியல் ஆதாயத்திற்காக திருதராஷ்டிர ஆலிங்கனம் செய்யும் பச்சை சந்திரபவாத கட்சி திமுகவே என்று நாராயணன் திருப்பதி விமர்சனம் செய்துள்ளார்.