ஒரு தெய்வ சக்தி தான் அவ்வாறு செய்தது! பல வருட வழக்கு குறித்து மனம் திறந்த முன்னாள் தலைமை நீதிபதி!

0
147
Only a divine power did so! Former Chief Justice open-minded about multi-year case!
Only a divine power did so! Former Chief Justice open-minded about multi-year case!

ஒரு தெய்வ சக்தி தான் அவ்வாறு செய்தது! பல வருட வழக்கு குறித்து மனம் திறந்த முன்னாள் தலைமை நீதிபதி!

சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதியும், மத்திய அரசால் ராஜ்யசபா உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டுள்ள ரஞ்சன் கோகாய் தனது சுயசரிதை புத்தக வெளியீட்டு  விழாவில் கலந்து கொண்டார். நீதிபதிக்கான நீதி, ஒரு சுயசரிதை என்று பெயரிடப்பட்ட புத்தகத்தின் வெளியீட்டு விழாவிலும் கலந்து கொண்டார்.

புதுடெல்லியில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியக நூலகத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் தான் சந்தித்த பல விதமான பிரச்சினைகள் மற்றும் அவற்றை எல்லாம் எப்படி எதிர்கொண்டார் என்பது போன்ற விவரங்களையும், தகவல்களையும் அவர் பகிர்ந்துகொண்டார். அதற்கு முன்னதாக சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதியாக இருந்த இவரின் தலைமையின் கீழ்தான் நீண்டகால வழக்கான சர்ச்சைக்குரிய அயோத்தி ராமர் கோவில் வழக்கிலும் தீர்ப்பு வழங்கப்பட்டு ஒரு முடிவுக்கு வந்தது.

கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒன்பதாம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நடைபெறும் போதும், இந்த தீர்ப்பினை எழுதும்போதும், தான் அனுபவித்த வித்தியாசமான உணர்ச்சிகள் குறித்தும், அவர் இந்த நிகழ்ச்சியில் விரிவாக பேசினார். என் சுய சரிதையில் குறிப்பிடப்பட்டுள்ள சரியானவை எல்லாம் சொல்லப்படவில்லை, சொல்லப்பட்டவை எல்லாம் சரியானவை அல்ல, சொல்லப்பட்டவை எல்லாம் சரியானவை அல்ல என்பது ஆகும் என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.

பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த அந்த வழக்கில் 2019ஆம் ஆண்டு அவரால்தான் முடிவுக்கு வந்தது. 40 நாட்கள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாய் உள்ளிட்ட 5 நீதிபதிகள் கொண்ட அமர்வின் மூலம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்ட நாளன்று நான் வழக்கின் அமர்வில் இருந்த மற்ற நீதிபதிகள் அனைவரையும் இரவு விருந்துக்கு அழைத்துச் சென்றேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் அந்த சர்ச்சைக்குரிய வழக்கில் ஒரு தெய்வ சக்தி தான் முடிவுக்கு கொண்டு வந்தது என்றும், அவர் ஆச்சரியத்துடன் தெரிவித்தார். சுப்ரீம் கோர்ட்டு ஊழியர் ஒருவர், இவருக்கு எதிராக பாலியல் வழக்கு ஒன்றையும் கொடுத்தார். அந்த வழக்கினை சிறப்பு அமர்வு ஒன்று தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. அந்த சிறப்பு அமர்விலும் ரஞ்சன் கோகாய் ஒரு நீதிபதியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கு விசாரணையில் அந்தப் பெண் ஊழியரின் வாதம் தள்ளுபடி செய்யப்பட்டு வழக்கு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது என்றும் தெரிவித்தார். இந்நிலையில் அந்த வழக்கு விசாரணையின் நீதிபதிகளில் ஒருவராக தான் இருந்திருக்க கூடாது என்றும் கூட அவர் வருத்தம் தெரிவித்தார். இந்த வழக்கு குறித்து மேலும் அவர் தெரிவிக்கையில் பின்னோக்கிப் பார்த்தால் நான் அந்த அமர்வில் நீதிபதியாக இருந்து இருக்கக் கூடாது.

நான் இல்லாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் நாம் அனைவருமே தவறு செய்கிறோம். அதை ஏற்றுக் கொள்வதில் எந்தத் தீங்கும் இல்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார். நான் தலைமை நீதிபதியாக இருந்த காலத்தில் அந்த பெண் கொடுத்த கடிதத்தை ஏற்று மீண்டும் அந்தப் பெண் மீது இரக்கப்பட்டு அவரது பணி அவருக்கு மீண்டும் வழங்கப்பட்டது என்றும் தெரிவித்திருந்தார்.

நாகாலாந்தில் சமீபத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அப்பாவி பொதுமக்கள் பலர் பலியான சம்பவம் மிகவும் துரதிருஷ்டவசமானது என்றும் அவர் தெரிவித்தார். மேலும் அந்த சம்பவம் மிகப்பெரிய தவறு என்றும் கூறியுள்ளார்.

Previous articleகேப்டனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்! வருத்தம் தெரிவித்த மருத்துவர்கள்!
Next articleகோர்ட்டில் மிகுந்த பரபரப்பு! திடீரென வெடித்து சிதறிய மர்மமான பொருள்!