ராஜீவ் கொலையாளிகள் விடுதலை! தமிழக அரசின் தீர்மானத்தை நிராகரித்த ஆளுநர்!

Photo of author

By Sakthi

முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் படுகொலை வழக்கில் சிறையில் இருக்கிற பேரறிவாளன் உள்ளிட்ட 7 நபர்களை விடுவிப்பது குறித்து அது சம்பந்தமான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது, இந்த வழக்கில் அந்த ஏழு பேரை விடுதலை செய்வது தொடர்பாக உச்ச நீதிமன்றம் தமிழக ஆளுநரிடம் விளக்கம் கேட்டிருந்தது. இந்த நிலையில், 7 பேர் விடுதலை தொடர்பாக முடிவு எடுப்பதற்கு குடியரசுத் தலைவருக்கு மட்டுமே அதிகாரம் இருப்பதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.

இதற்கு இடையில் அந்த 7 பேர் விடுதலை குறித்து உச்சநீதிமன்றத்தில் தமிழக ஆளுநர் ஒரு பதில் மனுவை தாக்கல் செய்தார் அந்த பதில் மனுவில் ஏழு பேரை விடுதலை செய்வதற்கான அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே இருக்கிறது என்றும் மாநில அரசு தீர்மானம் நிறைவேற்றுவதற்கு அதிகாரம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது 7 பேர் விடுதலையில் அதுதொடர்பாக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றுவதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று தமிழக அரசின் தீர்மானத்தை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நிராகரிப்பு செய்திருக்கிறார்.