அட! இந்த நடிகருக்கு இவ்வளவு சொத்தா? தெரியாமல் போச்சே!

0
124

அட! இந்த நடிகருக்கு இவ்வளவு சொத்தா? தெரியாமல் போச்சே!

சினிமாவிற்கு எத்தனை புதுமுகங்கள் வந்தாலும் மக்கள் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கின்றனர்.அந்த இடத்திற்கான கடின உழைப்பும், அர்பணிப்பும் இருந்தால் மக்கள் அவர்களை தலையில் வைத்து கொண்டாட தவறுவதில்லை.அவர்களும் மிக விரைவிலேயே பிரபலமான ஒரு நபராக மாறி விடுகின்றனர்.அப்படி நம் மனதில் நீங்காத இடம் பிடித்த ஒருவரை எப்படி மக்கள் கொண்டாடுகிறார்கள்.

அந்த வரிசையில் நமது திருச்சியை சேர்ந்த ஒருவர் தற்போது அந்த இடத்தை பிடித்துள்ளார்.இவர் தனது ஆரம்ப நாட்களை சின்னத்திரையில் ஆரம்பித்தாலும் தற்போது வெள்ளித் திரையில் மக்கள் இவரை மிகவும் கொண்டாடுகிறார்கள். சின்னத்திரையில் பிரபலமான விஜய் டிவி புகழ் கலக்க போவது யாரு என்ற ஒரு நிகழ்ச்சியின் மூலம் ஒரு சக போட்டியாளராக கலந்து கொண்டு அவரது திரையுலக பயணத்தை ஆரம்பித்தார்.

அதன் பிறகு அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக களமிளங்கினார்.பின்னர் அதன் டி.ஆர்.பி. ரேடிங் எங்கோ போக அதன் வைத்து வெள்ளித்திரையில் 2012ம் ஆண்டு ரிலீஸ் ஆன மெரீனா என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி தனுஷின் மனதில் இடம் பிடித்து தொடர்ந்து எதிர்நீச்சல் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து தனுஷின் தயாரிப்பில் நடிக்க ஆரம்பித்து பல வசூல் சாதனைகளை படைத்தார்.அதிலும் குறிப்பாக ரஜினிமுருகன்,வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்றவை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.இவர் அடுத்ததடுத்து வசூல் சாதனை பல புரிந்தார்.அதன்பின் தனுஷிற்கும்,சிவகார்த்திகேயனுக்கும் சில மனகசப்புகள் ஏற்பட்டதால் வெளி தயாரிப்புகளில் நடிக்க ஆரம்பித்தார்.

sivakarthikeyan

சிவகார்த்திகேயனின் மேனேஜர் ஆக உள்ள ஆர்.டி.ராஜா இவரை வைத்து ரெமோ,வேலைக்காரன்,சீமராஜா உள்ளிட்ட பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்தார்.அதிலும் வேலைக்காரன் யாருமே நினைத்து பார்க்காத அளவு வசூலில் களைகட்டியது.இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் வேலைக்காரன் தோல்வி படமாகவே எண்ணப்படுகிறது.

சில லட்சங்களில் ஆரம்பித்த சிவகார்த்திகேயனின் சம்பளம் தற்போது 22 கோடி வரை பேசப்படுகிறது என நெருங்கிய வட்டாரங்கள் சொல்கின்றன.இருந்தாலும் சம்பளம் யார்யார் சரியாக தருவார்கள் என யோசித்து அந்த தயரிப்பாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கிறார்.அப்படி அவருக்கு உடன்பாடு ஏற்படாவிட்டால் தன் சொந்த தயாரிப்பில் படம் எடுப்பதாகவும் சொல்கிறார்கள்.

இவர் சினிமாவிற்கு வந்து எட்டு வருடங்கள் தான் ஆனது என்றாலும் சொத்து மதிப்பு மட்டும் 150 முதல் 175 கோடியாக உயர்த்திள்ளார் என்பது குறிப்பிடப்பட்டது.டாக்டர் படம் ரிலீஸ் ஆனா பின் சம்பள உயர்வை பற்றி பேச உள்ளதாகவும் சொல்கிறார்கள்.குடும்பமாக தியேட்டர்களுக்கு மக்கள் செல்வதே குறைவாக உள்ள கால கட்டத்திலும் சிவகார்த்திகேயனின் திரைப்படங்களுக்கு குடும்பமாக மக்கள் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த அளவிற்கு உயர்ந்த போதிலும் உதவும் எண்ணத்தை இவர் கைவிடாது பின்தொடர்கிறார். பல மாணவர்களின் கல்வி செலவை இவரே ஏற்கும் பெருந்தன்மையானவர்.

Previous articleஅன்புமணி ராமதாஸ் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி! மகிழ்ச்சியில் ஸ்டாலின்!
Next articleபாஜக எம்எல்ஏ கொரோனா தொற்றால் உயிரிழப்பு! அதிர்ச்சியில் கட்சி நிர்வாகம்!