ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கிடையே மிகவும் தீவிரமாக போர் நடைபெற்று வருவதால் உலக அளவில் கச்சா எண்ணெயின் விலை நிலவரம் நிர்வாக அதிகரித்துவருகிறது. காரணம் ரஷ்யா கச்சா எண்ணெய் விற்பனையில் 2மிடம் வகித்து வருகிறது. இதன் காரணமாக, கச்சா எண்ணெயின் விலை அதிகரித்து வருகிறது.
இதனால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அதிகரிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அனேகமாக 5 மாநில சட்டசபை தேர்தல்கள் முடிவடைந்தவுடன் மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், உக்ரைனில் சிக்கித் தவித்து வரும் இந்திய மாணவர்களை மீட்பதற்கு மத்திய அரசு பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது .ஆபரேஷன் கங்கா என்ற திட்டத்தை செயல்படுத்தி அதன் மூலமாக உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு விமானங்களை அனுப்பி அண்டை நாடுகளின் உதவியோடு இந்தியர்களை மீட்டு வருகிறது மத்திய அரசு.
ஆகவே இந்த பணிகளுக்காக அனுப்பிவைக்கப்பட்ட விமானங்களில் முதல் விமானம் கடந்த 26ம் தேதி பிப்ரவரி மாதம் பிற்பகல் 2 மணி அளவில் ருமேனியா தலைநகரம் புகாரெஸ்டிலிருந்து 219 உக்ரைன் வாழ் இந்தியர்களை ஏற்றிக்கொண்டு இந்தியா வந்து சேர்ந்தது.
இதனை தொடர்ந்து 2வது விமானம் 26ம் தேதி இரவு வந்து சேர்ந்தது. இந்த சூழ்நிலையில், உக்ரைனில் சிக்கியிருந்த மேலும் 240 இந்தியர்களுடன் ஹங்கேரி நாட்டின் புதாபெஸ்டுவிலிருந்து புறப்பட்ட 3வது விமானம் கடந்த 26ஆம் தேதி காலை 10 மணியளவில் டெல்லியை வந்து சேர்ந்தது.
அதேபோன்று கடந்த 27ம் தேதி காலை 6 மணி அளவில் உக்ரேனில் சிக்கித்தவித்த இந்திய மாணவர்களை மீட்பதற்காக சென்ற விமானம் பத்திரமாக டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கியது. அதில் உக்ரைனில் சிக்கித் தவித்த இந்திய மாணவர்கள் தாயகம் திரும்பினார்கள்.
தற்சமயம் உக்ரைனில் போர் தீவிரமடைந்து வருவதால் உக்ரைனின் அண்டை நாடுகள் மூலமாக இந்திய மாணவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று ஒரு சில விஷயங்களை தெரிவித்திருக்கிறது.
ஆபரேஷன் கங்கா திட்டத்தின் மூலமாக அடுத்த 24 மணி நேரத்தில் 16 விமானங்கள் உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு செல்லவிருக்கின்றன. எங்களுடைய அறிவுரையின் பெயரில் 20000ற்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் உக்ரைன் எல்லையை கடந்து அண்டை நாடுகளுக்கு சென்றிருக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
உக்ரைன் அரசிடம் இந்திய மாணவர்களை மீட்பதற்காக சிறப்பு தொடர் வண்டிகளை இயக்குமாறு கேட்டிருந்தோம். ஆனாலும் இதுவரையில் அது தொடர்பாக எந்தவிதமான தகவலும் கிடைக்கவில்லை. ஆனாலும் ரஷ்யா பேருந்துகளை இயக்குகிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
குறிப்பாக கார்கிவ் மற்றும் பிசோக்கின் பகுதியில் சிறப்பு கவனம் செலுத்துகின்றோம்.1000 இந்தியர்கள் அந்த பகுதியிலிருக்கிறார்கள் மற்றும் சுமியில் 700 பேர் சிக்கியிருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
மேலும் அங்கே சிக்கியிருக்கும் கடைசி இந்தியரை மீட்கும் வரையில் ஆப்ரேஷன் கங்கா திட்டம் தொடரும், வங்காளதேசத்தை சேர்ந்த ஒருவரை மீட்டிருக்கிறோம் நேபாள மக்களை மீட்க்குமாறு கோரிக்கை வந்திருக்கிறது என்றும் வெளியுறவுத்துறை வெளியிட்டிருக்கின்ற செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.