பிக்பாஸ் ஜெயித்தால் மட்டும் வாய்ப்புகள் வராது! நடிகர் ஆரவ் அவர்கள் பேட்டி!!

0
267
#image_title
பிக்பாஸ் ஜெயித்தால் மட்டும் வாய்ப்புகள் வராது! நடிகர் ஆரவ் அவர்கள் பேட்டி!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டிலை ஜெயித்தால் மட்டும் சினிமா வாய்ப்புகள் நமக்கு அதிகம் கிடைக்காது என்று பிக்பாஸ் டைட்டில் வின்னரும் நடிகருமான ஆரவ் அவர்கள் பேட்டியளித்துள்ளார்.
கடந்த 2017ம் ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் பாகம் தொடங்கப்பட்டது. பிக்பாஸ் முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பிற்கு பிறகு பிக்பாஸ் 2, பிக்பாஸ் 3 என்று தற்போது ஆறு சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. மேலும் பிக்பாஸ் ஓடிடி என்றும் சென்ற வருடம் ஓடிடி ரசிகர்களுக்காகவே தனியாக ஒரு சீசன் தொடங்கப்பட்டது. தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் எப்பொழுது வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கு மத்தியில் நடிகர் ஆரவ் அவர்கள் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட ஆரவ் சிறப்பாக விளையாடி பிக்பாஸ் சீசன் 1 வெற்றியாளராக மாறி டைட்டிலை கைப்பற்றினார். அதன் பிறகு இவருக்கு சினிமா வாய்ப்புகள் பிக்பாஸ் டைட்டில் வெற்றி பெறுவதற்கு முன்பு எவ்வாறு இருந்ததோ அது மாதிரியே தான் தற்போதும் உள்ளது.
இதையடுத்து சமீபத்திய பேட்டியில் நடிகர் ஆரவ் அவர்கள் “சினிமா முற்றிலும் வேறுபட்டது. இங்கு நீங்கள் நடிக்க வேண்டும் என்றால் நீங்கள் என்ன தொழில் செய்கிறீர்கள் என்றுதான் முதலில் பார்க்கப்படுகிறது. பிக்பாஸ் சென்றாலும் சரி டைட்டிலை வென்றாலும் சரி சினிமா வாய்ப்புகள் தானாக வந்துவிடாது” என்று கூறியுள்ளார்.
பிக்பாஸ் டைட்டிலை வெற்றி பெற்ற பிறகு இவர் மார்கெட் ராஜா என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். ஆனால் அந்த திரைப்படம் கைகொடுக்கவில்லை. நடிகர் உதய்நிதி ஸ்டாலின் அவர்களின் நடிப்பில் வெளியான கலகத்தலைவன் திரைப்படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நானும் இருக்கிறேன் என்று நியாபகப்படுத்தினார்.
நடிகர் ஆரவ் கூறியதும் ஒரு விதத்தில் உண்மை தான். இன்றளவில் பிக்பாஸ் சென்ற போட்டியாளர்களில் எத்தனை பேர் படங்களில் நடித்து வருகின்றனர் என்பதை விரல் விட்டு எண்ணி விடலாம். நடிகர் ஹரீஷ் கல்யாண், நடிகை ரைசா வில்சன், நடிகை ரித்விகா இன்னும் சிலர் மட்டும் தான் சினிமாக்களில் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Previous articleஇன்றைய ஐபிஎல் போட்டி! வென்றே வேண்டும் என்ற கட்டாயத்தில் பெங்களூரு அணி!!
Next articleபிரதமர் மோடி அவர்களின் தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்! டெல்லியில் நடைபெறும் என்று அறிவிப்பு!!