மோடியின் செயல்பாடுகளை கவனிக்காத எதிர்க்கட்சிகள் …..! குஷ்பு சரமாரி குற்றசாட்டு ….!

Photo of author

By Sakthi

தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்தே தீரும் என்று பிரபல நடிகையும் சமீபத்தில் பாஜகவில் இணைந்த வருமான திருமதி குஷ்பு தெரிவித்திருக்கிறார்.

நடிகை குஷ்பு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயார் மறைவிற்கு ஆறுதல் கூறுவதற்காக முதல்வரின் வீட்டிற்கு சென்றார் அதன்பின்பு பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் செய்யும் நாட்டுக்கான நல்ல நன்மை உள்ள திட்டங்களை கவனிக்காமல் அவர் அணிந்திருக்கும் உடையை மட்டுமே பார்க்கிறார்கள் என்றும் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பாஜகவிற்கு ஒரு முக்கிய தேர்தலாக இருக்கும். எனவும் அதோடு இந்த தேர்தலில் தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதாவில் இணைந்த நடிகை குஷ்பு, காங்கிரஸ் கட்சி தனது கருத்தினை ஒரு பொருட்டாகவே எண்ணுவதில்லை என்றும், உயர் பதவியில் இருப்பவர்கள் தன் மீது அதிகாரம் செலுத்தினார்கள் என்றும், சரமாரி குற்றத்தை சாட்டியுள்ளார். அதேநேரம் பாரதிய ஜனதா கட்சி மற்றும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் திட்டங்கள் ஆகியவை நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கின்றது எனவும் புகழ்ந்துள்ளார்.
தான் இருக்கும் கட்சிக்கும் இருக்கும் இடத்திற்கும் ஏற்றதை போல பேசுவதே அரசியலில் இயல்பான ஒன்று என வெளிப்படையாகவே தெரிவித்த குஷ்பு, தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் அதன் தமிழகத் தலைவர் திருநாவுக்கரசர் அவர்களையும் விமர்சித்து வருகின்றார்