ADMK BJP: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருப்பதால் சிறிய கட்சிகள் தொடங்கி திராவிட கட்சிகள் வரை அனைவரும் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றன. ஜெயலலிதா இறந்ததிலிருந்தே அதிமுக பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது. எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக பதவி ஏற்றதிலிருந்தே இந்த கட்சி தொடர் தோல்விகளை மட்டுமே சந்தித்து வருகிறது. இதனால் இந்த முறையாவது வெற்றி பெற வேண்டுமென இபிஎஸ் கடுமையாக போராடி வருகிறார்.
இதற்காக அதிமுக-பாஜக கூட்டணி அமைத்து வெற்றி வியூகங்களை வகுத்து வருகிறது. ஆனால் இபிஎஸ்க்கு அவரது தலைமையின் மேல் இருக்கும் பயமே அதிமுகவின் தோல்விக்கு காரணமாக அமைந்து விடும் என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். அதிமுக-பாஜக கூட்டணியில் இருந்தாலும், இபிஎஸ் எடுக்கும் சில முடிவுகள் பாஜகவிற்கும் அதிகளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று டெல்லி மேலிடம் கருதுகிறது. அந்த வகையில் எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக இருப்பதால் தான் கூட்டணி முரண்பாடுகளும், உட்கட்சி பிரச்சனையும் தலைதூக்கியுள்ளது.
இதனால் அதிமுகவின் முதல்வர் வேட்பாளரை மாற்றும் பணியில் பாஜக ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. அதன் அடிப்படையில், முன்னாள் முதல்வராக இருந்த ஓபிஎஸ்யை மீண்டும் முதல்வர் வேட்பாளராக நிறுத்துவது குறித்து பாஜக மேலிடம் பரிசீலித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக ஓபிஎஸ் வந்துவிட்டால், அவர் பாஜகவிற்கு சாதகமாகவே செயல்படுவார் என்று பலரும் கூறுகின்றனர். மேலும் பாஜகவின் இந்த முடிவு இபிஎஸ்க்கு பெருமளவு நஷ்டத்தை ஏற்படுத்தும் என்று கணிக்கப்படுகிறது.