ADMK: தேர்தல் நெருங்கும் சமயத்தில் மாநில கட்சிகளிடையே பல்வேறு திருப்பங்கள் நிலவி வருகின்றன. திமுகவின் கூட்டணி கட்சிகள் சில நிபந்தனைகளை முன்வைத்துள்ள நிலையில், தவெகவின் கூட்டணி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் அதிமுகவில் பிரிவினைகள் அதிகரித்து வருகின்றன. அதிமுகவிலிருந்து பிரிந்த தினகரன் தனிக்கட்சி துவங்கிய நிலையில், சசிகலா அரசியலிலிருந்து ஒதுங்கி இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். ஓபிஎஸ் அதிமுக ஒருங்கிணைப்பு குழு ஒன்றை ஆரம்பித்துள்ளார். மேலும் அதிமுகவுக்கு உரிமை கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில், டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் ஒருங்கிணைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என இபிஎஸ்க்கு கெடு விதித்திருந்தார். அதன் படி நேற்று நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இதற்கான முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இபிஎஸ் இதனை தட்டிக் கழித்து விட்டார். இதன் மூலம் இவர்களை மீண்டும் கட்சியில் சேர்ப்பது நடக்காத காரியம் என்பதை இபிஎஸ் தெளிவுபடுத்தி விட்டார் என்று ஒரு தரப்பு கூறி வந்தது.
ஆனால் அதிமுகவை சேர்ந்தவர்கள், பொதுக்குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பு குறித்து இபிஎஸ் மௌவுனம் காத்ததால், அரை மனதாக ஒருங்கிணைப்புக்கு அவர் சம்மதம் தெரிவித்து விட்டார் என்று கூறுகின்றனர். மேலும் ஓபிஎஸ் அதிமுகவில் இணைக்கப்பட்டாலும் அவருக்கு முக்கிய பொறுப்புகள் எதுவும் வழங்கபடாது என்றும், இபிஎஸ் கை காட்டும் தொகுதியில் தான் ஓபிஎஸ் வேட்பாளராக நிற்க வேண்டும் என்றும் கூறியுள்ளதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றனர். இந்த தகவல் இன்னும் உறுதிபடுத்த படாத நிலையில், ஒரு வேலை இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டால், அதிமுக, பாஜக மற்றும் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று மதிப்பிடப்படுகிறது.

