டெல்லி சென்ற ஓபிஎஸ்.. அமித்ஷாவுடன் சந்திப்பு!! செய்தியாளர்களிடம் பர பர பேட்டி!!

0
67
OPS went to Delhi.. Meeting with Amit Shah!! Interview with reporters!!
OPS went to Delhi.. Meeting with Amit Shah!! Interview with reporters!!

ADMK BJP: அதிமுகவில் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு முதல்வர் பதவியை ஏற்ற எடப்பாடி பழனிசாமி முக்கிய தலைவர்கள் பலரையும் கட்சியிலிருந்து நீக்கினார். அதில் ஒருவர் ஓ.பன்னீர் செல்வம். கட்சியிலிருந்து அடியோடு நீக்கப்பட்ட ஓபிஎஸ் அதிமுக ஒருங்கிணைப்பு குழு ஒன்றை தொடங்கினார். இந்த குழுவில் இபிஎஸ் தலைமைக்கு எதிரானவர்களும், அதிமுக ஒன்றிணைய வேண்டும் என நினைத்தவர்களுக்கு முக்கிய பங்காற்றினார்.

இத்தனை வருடங்கள் ஆகியும் ஒருங்கிணைப்பு பணியை மேற்கொள்ளாமல், இருந்ததால் ஆத்திரமடைந்த ஓபிஎஸ் டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று இபிஎஸ்க்கு கெடு விதித்திருந்தார். இல்லையெனில் அதிமுக ஒருங்கிணைப்பு குழுவின் முடிவு வேறு மாதிரி இருக்கும் என்றும் எச்சரித்திருந்தார். இந்நிலையில் ஓபிஎஸ் நேற்று டெல்லி சென்றது பேசு பொருளானது. இவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து 20 நிமிடம் பேசி இருக்கிறார். இந்த சந்திப்பு அதிமுக ஒருங்கிணைப்பு குறித்ததா, தனிக்கட்சி துவங்குவது பற்றியதா என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழுந்தது.

இத்தகைய சூழலில், டெல்லியில் இருந்து திருப்பிய ஓபிஎஸ், சென்னை விமான நிலையத்தில், செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினேன். தேவைபடும் போது அமித்ஷாவிடம் அரசியல் பேசுவேன், தமிழகத்தில் உள்ள அரசியல் சூழ்நிலைகளை பற்றி அமித்ஷாவிடம் விவாதித்து வந்திருக்கிறேன் என்று கூறினார். இவரின் இந்த பேச்சு பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதிமுக பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வரும் சமயத்தில், இப்போது இவர் அமித்ஷாவை சந்தித்து பேசியது குறித்து கூறிய கருத்து ஏற்புடையதாக இல்லை என அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Previous articleபாஜக தலைவரை சந்திக்கும் விஜய்.. வானதி சீனிவாசன் சொன்ன குட் நியூஸ்!!
Next articleஅதிமுக வேண்டாம்.. தொண்டர்கள் மட்டும் போதும்!! செங்கோட்டையனின் நெக்ஸ்ட் மூவ்!!