கூட்டணிக்கு அடித்தளமிட்ட ஓபிஎஸ்.. விஜய் பிரச்சாரம் குறித்து கருத்து!!

0
150
OPS, which laid the foundation for the alliance.. Comment on Vijay's campaign!!
OPS, which laid the foundation for the alliance.. Comment on Vijay's campaign!!

TVK:நடிகர் விஜய்யால் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகம் தமிழக அரசியலில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவரின் 2 மாநாட்டிற்க்கும் வந்த கூட்டத்தை பார்த்து அனைத்து கட்சிகளும், அதிலும் முக்கியமாக ஆளுங்கட்சியான திமுக பயப்படுவதாக தவெக தொண்டர்களும், தலைவர் விஜய்யும் கூறி வந்தனர்.

இதனை தொடர்ந்து தனது பிரச்சாரத்தையும் தொடங்கிய விஜய்க்கு எங்கு சென்றாலும் கட்டுப்பாடுகளும், பல்வேறு நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன. பல இடங்களுக்கு அனுமதி தராமல் அலைக்களித்தனர். இதனால் விஜய் நீதிமன்றத்தை நாட உள்ளார் என்ற தகவலும் பரவியது. எதிர் கட்சிகளுக்கு கூட இல்லாத கட்டுப்பாடுகள் தவெகவிற்கு மட்டும் ஏன் என்ற கேள்வி எழுந்தது.

இதனை தவெக தொண்டர்கள் தங்களது முதல் வெற்றியாக கருதி வந்தனர். விஜய்யிக்கு விதிக்கப்படும் கட்டுபாடுகள் குறித்து ஓபிஎஸ்யிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது அது தேவையில்லாத கட்டுப்பாடுகள் என்றும், விஜய் 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவாரா என்ற கேள்விக்கு, தேர்தல் நடந்த பிறகு அந்த வாக்குகளை எண்ணி பார்த்து தான் பதில் சொல்ல முடியும் என்றும் கூறினார்.

ஓபிஎஸ் கூறிய தேவையில்லாத கட்டுப்பாடுகள் என்ற கருத்து அரசியல் களத்தில் பெரும் விவாதத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஓபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன் போன்றோர் விஜய்யுடன் கூட்டணி அமைப்பார்கள் என்று பேசப்பட்டு வந்த நிலையில் ஓபிஎஸ்யின் இந்த கூற்று அதனை ஆதரிக்கும் வகையில் உள்ளது என்று கூறப்படுகிறது.

Previous articleமகனுக்கு போட்டியாக ராமதாஸ் அறிவித்த  போராட்டம்!! அதோகதியாகும் அன்புமணி நிலை!!
Next articleடிசம்பரில் கூட்டணி அறிவிப்பு.. விஜய் குறித்த கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்த அரசியல் புள்ளி!!