தற்போது பருவ மழை இந்தியா முழுவதும் பெய்ய தொடங்கி இருக்கிறது.அதனால் நாட்டின் பல் வேறு மாநிலங்களில் மழை பெய்து வருகிறது.
அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அந்த மாநிலத்தில் அடுத்த 5 நாட்களுக்கு ஆரஞ்சு அவார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
இன்று அதிகாலை முதலே அங்கே கனமழை பெய்து வருவதால் ரயில் மற்றும் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டிருக்கிறது. நகரத்தின் பல இடங்களிலும் மழை நீர் தேங்கியிருக்கிறது.
அந்த மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் ஏக்நாத் ஷிண்டே வெள்ள அபாயம் இருக்கின்ற பகுதிகளிலிருந்து பொதுமக்களை அப்புறப்படுத்தி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்குமாறு உத்தரவிட்டிருக்கிறார்.
அத்துடன் அதிகாரிகள் விழிப்புடன் இருக்கவும், என் டி ஆர் எஸ் படைகளை தயார் நிலையில் வைத்திருக்கவும், உத்தரவிட்டிருக்கிறார். மும்பையில் புறநகர் ரயில் சேவையும் சாலை போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறது.
சத்ரபதி சிவாஜி தொடர்வண்டி நிலையத்திலிருந்து தொடர்வண்டிகள் தாமதமாக புறப்பட்டு செல்கின்றன. கனமழை தொடர்ந்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது .