ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழா! சிறந்த நடிகருக்கான விருதை விஜய் வென்றார்!!

0
211
#image_title
ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழா! சிறந்த நடிகருக்கான விருதை விஜய் வென்றார்!
ஜப்பானில் நடைபெற்ற ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் விஜய் வென்றுள்ளார்.
ஜப்பான் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழா நடக்கும். இந்த சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ் மொழியில் வெளியாகும் சிறந்த படங்களுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் வருது அளிக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில் 2021ம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படங்களில் சிறந்த தமிழ் திரைப்படங்களுக்கு ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்படவிழாவில் விருதுகள் அறிவிக்கப்பட்டது.
இந்த விருதுகள் பட்டியலில் சிறந்த திரைப்படமாக சார்பட்டா பரம்பரை திரைப்படமும், மாஸ்டர் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருது நடிகர் விஜய் அவர்களுக்கும் அறிவிக்கப்பட்டது. மேலும் மண்டேலா, மாநாடு, ஜெய் பீம், டாக்டர் போன்ற திரைப்படங்களுக்கும் பல்வேறு வகைகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விருதுகள் பட்டியல்:
சிறந்த திரைப்படம் – சார்பட்டா பரம்பரை
சிறந்த நடிகர் – விஜய் (மாஸ்டர்)
சிறந்த நடிகை – கங்கனா ரணாவத் (தலைவி)
சிறந்த இசையமைப்பாளர் – யுவன் சங்கர் ராஜா (மாநாடு)
சிறந்த ஒளிப்பதிவாளர் – தேனி ஈஸ்வர் (கர்ணன்)
சிறந்த திரைக்கதை – வெங்கட் பிரபு (மாநாடு)
சிறந்த இயக்குநர் – ப ரஞ்சித் (சார்பட்டா பரம்பரை)
சிறந்த நடன பயிற்சியாளர் – தினேஷ் குமார் (மாஸ்டர் – வாத்தி கம்மிங் பாடல்)
சிறந்த தயாரிப்பு நிறுவனம் – ஒய் நாட் ஸ்டுடியோஸ் (மண்டேலா)
சிறந்த துணை நடிகர் – மணிகண்டன் (ஜெய் பீம்)
சிறந்த துணை நடிகை – லிஜோமோல் ஜோஸ் (ஜெய் பீம்)
சிறந்த வில்லன் – விஜய் சேதுபதி (மாஸ்டர்)
சிறந்த காமெடியன் – ரெடின் கிங்ஸ்லி
சிறந்த குழந்தை நட்சத்திரம் – ஜாரா வினீத் (டாக்டர்)
சிறந்த படத்தொகுப்பு – பிரவீன் கே.எல் (மாநாடு)
சிறந்த சண்டை பயிற்சியாளர் – திலீப் சுப்பராயன் (சுல்தான்)
சிறந்த VFX – நெக்ஸ்ஜென் மீடியா
சிறந்த ஆர்ட் டேரக்டர் – ராமலிங்கம் (சார்பட்டா பரம்பரை)
சிறந்த சவுண்ட் டிசைனர் – டி.உதய் (அரண்மனை 3)
நன்கு கூர்ந்து கவனிக்கப்பட்ட திரைப்படம் – மண்டேலா
Previous articleஜூலை 12ம் தேதி சந்திராயன் 3 விண்ணில் பாய்கிறது! இஸ்ரோ நிறுவனம் அறிவிப்பு!!
Next articleஇன்ஸ்டாகிராமில் பிரபலம் ஆக வேண்டும்! ஆசையில் 15000 ரூபாயை இழந்த இளம்பெண்!!