தமிழக அரசுக்கும் இந்திய மக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்த இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே!

0
155

இலங்கை தற்போது கடுமையான நெருக்கடி நிலையை சந்தித்திருக்கிறது. அதோடு அந்த நாட்டின் அரசியல் கட்சித் தலைவர்கள் அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் பொதுமக்களால் தாக்கப்படுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதேவேளை முன்னாள் பிரதமர் ராஜபக்சே அவர்களின் வீடு தீக்கிரையாக்கப்பட்டது அங்கே பரபரப்பை கிளப்பியது.

இந்த நிலையில், இலங்கைக்கு நிவாரண உதவிகளை அனுப்பி ஆதரவு கரம்கொடுத்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் இந்திய மக்களுக்கு இலங்கையின் தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நன்றி தெரிவித்திருக்கிறார்.

சுற்றுலாவில் பிரத்தியேக வருவாயாக கொண்டிருக்கின்ற இலங்கையில் நோய்த்தொற்று, ஊரடங்கு உள்ளிட்டவை காரணமாக, மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சி உண்டானது என சொல்லப்படுகிறது.

இதன் காரணமாக, இலங்கையில் மின்வெட்டு, உணவு, மருந்து, பெட்ரோல், தட்டுப்பாடு என பல்முனை தாக்குதல்களுக்கு பொதுமக்கள் ஆளாகினர். அத்தியாவசிய பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கின்ற நிலையில், பொருட்களின் விலைகளும் விண்ணை முட்டுமளவிற்கு அதிகரித்தது.

இதனைத் தொடர்ந்து அந்த நாட்டு மக்கள் அனைவரும் போராட்டத்தில் குதித்து அரசாங்கத்திற்கு எதிராக 2 மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

இதனால் மகிந்த ராஜபக்ச தான் வகித்து வந்த பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். ராஜபக்சேவின் வீடு போன்ற சொத்துக்கள் அனைத்தும் போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்டன.

இதற்கு நடுவே போராட்டக்காரர்களுக்கு பயந்து முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தன்னுடைய குடும்பத்தினருடன் தமிழர்கள் பெரும்பான்மையாக வசித்து வரும் இலங்கை திரிகோணமலை பகுதியிலுள்ள கடற்படை தளத்தில் தஞ்சம் புகுந்திருக்கின்றன என சொல்லப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து இலங்கையின் குழப்பமான சூழ்நிலைக்கிடையில் புதிய பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரனில் விக்ரமசிங்கே பதவியேற்றார்.

இதனை அடுத்து ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றவுடன் இலங்கை பிரச்சனைக்கு தீர்வு காண சிறப்பு குழுக்களை அமைத்திருக்கிறார் என சொல்லப்படுகிறது.

இதற்கு நடுவே கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கைக்கு அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி வைப்போம் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அந்த நாட்டிற்கு உதவும் விதத்தில் 40 டன் அரிசி, 137 வகை மருந்துகள், 500 டன் பால் பவுடர், உள்ளிட்டவை வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார் முதலமைச்சர் ஸ்டாலின். இதுகுறித்து சட்டசபையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இலங்கை மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்குவதற்காக 47 அதிகாரிகளைக் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்திருந்தது இந்த குழு நிவாரண பொருட்கள் பணிகளை முன்னெடுத்து தொடர்ந்து தமிழகத்திலிருந்து 123 கோடி ரூபாய் மதிப்புள்ள நிவாரண பொருட்களை இலங்கைக்கு அனுப்பப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது.

 

இதனையடுத்து சென்னை துறைமுகத்தில் இருந்து மே மாதம் 18ஆம் தேதி அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

பொருட்கள் ஏற்றப்பட்ட கப்பலை முதலமைச்சர் ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைத்தார் முதல்கட்டமாக 2.84 கோடி ரூபாய் மதிப்புள்ள அத்தியாவசிய பொருட்கள் கப்பலில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது என தெரிகிறது.

இவ்வாறான சூழ்நிலையில் இலங்கைக்கு நிவாரண உதவிகளை அனுப்பிய ஆதரவுக்கரம் நீட்டிய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் இந்திய மக்களுக்கு இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே நன்றி தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து ரணில் விக்ரமசிங்கே தன்னுடைய வலைப்பதிவில் தெரிவித்திருப்பதாவது இந்தியாவிலிருந்து பால்பவுடர் அரிசி மற்றும் மருந்துகள் உட்பட 2 பில்லியன் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் இலங்கைக்கு இன்று வந்து சேர்ந்திருக்கின்றன தெரிவித்திருக்கிறார்.

அதோடு ஆதரவுக்கரம் நீட்டிய தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் இந்திய மக்களுக்கும் எங்களுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் அவர் அந்த பதிவில் தெரிவித்திருக்கிறார்.

Previous articleமாநில அரசின் மீது குறை கூறுவதா? அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காட்டமான பதில்
Next articleஅவரை சந்திப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்! பிரதமர் நரேந்திர மோடி!