35000 பேரில் நீங்கள் பட்டதாரியா! பணியில் சேரலாம்! – இன்போசிஸ் அதிரடி!
இந்தியாவின் இரண்டாவது பெரிய ஐடி நிறுவனமாக இன்ஃபோசிஸ் இருந்து வருகிறது. இன்போஸிசில் நடப்பு நிதி ஆண்டில் 35 ஆயிரம் பட்டதாரிகள் வேலைக்கு எடுக்க திட்டமிட்டுள்ளது. ஒருபுறம் தேவை உயர்ந்து வருகிறது. அதே சமயத்தில் வெளியில் இருந்து வெளி ஏறுவோர் உயர்வதால் பணியாளர்களுக்கான தேவையும் உயர்ந்திருக்கிறது.
கடந்த ஜூன் காலாண்டில் வெளியேறுவோர் விகிதம் 13.9 சதவீதமாக இருந்தது. அதே மார்ச் காலாண்டில் 10.9 சதவீதமாக இருந்தது. இந்த தேவையை ஈடுகட்ட கல்லூரிகளில் படித்த மாணவர்களை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டிருப்பதாக இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி பிரவீன் ராவ் தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவிலிருந்து மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும் புதிய பணியாளர் சேர்க்கை இருக்கும் எனவும் இன்ஃபோசிஸ் தெரிவித்திருக்கிறது. பணியாளர்களுடன் உரையாடுவது என்பது முக்கியமானது. அவர்களுக்கும், அவர்களைச் சார்ந்தவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையில் இருக்கிறோம். இது தவிர பணிகள் அடுத்த கட்ட வாய்ப்பு மற்றும் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பும், இன்ஃபோசிஸ் வழங்கி வருகிறது. எனவும், கடந்த நிதியாண்டில் மட்டும் 21,000 புதிய வேலைவாய்ப்புகளை இன்போசிஸ் வழங்கி இருக்கிறது என்றும் கூறினார்.
ஜூன் காலாண்டில் மட்டும் 8300 நபர்களுக்கு வேலை வழங்கி உள்ளது. தற்போதைய நிலையில் 2.67 லட்சம் பணியாளர்கள் உள்ளனர். இதில் பெண் பணியாளர்களின் பங்கு 38.6 சதவீதமாக இருக்கிறது. ஜூலை 14-ஆம் தேதி வெளியானது. இதில் நிகரலாபம் 22.7 சதவீதம் உயர்ந்து கடந்த ஆண்டில், இதே காலத்துடன் ஒப்பிடும்போது உயர்ந்துள்ளதாக தெரிகிறது. ரூபாய் 5,195 கோடியாக இருக்கிறது. வருமானமும் 17.9 சதவீதம் உயர்ந்து ரூ.27,986 கோடியாக இருக்கிறது என்றும் இன்போசிஸ் அறிவித்துள்ளது