ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறும் அமெரிக்கப் படைகள்! வெளிநாட்டவர்கள் மீட்கப் படுவார்களா கடும் பயத்தில் உலகநாடுகள்!

0
100

ஆப்கானிஸ்தான் நாட்டில் இருக்கின்ற அயல்நாட்டவர் வெளியேற்றும் வேலைகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்கப்படும் என்ற தாலிபான்கள் அறிவித்து இருக்கின்ற உத்தரவாதம் தொடர்பாக அமெரிக்கா, பிரிட்டன், உட்பட 90க்கும் அதிகமான நாடுகள் கூட்டறிக்கை வெளியிட்டிருக்கின்றன.அமெரிக்கப் படைகள் வெளியே ஏறியதில் இருந்து ஆப்கானிஸ்தான் படைகள் மீதான தாக்குதலை தாலிபான்கள் ஆரம்பித்துவிட்டன. சரியாக திட்டமிட்டு செயல்பட்ட காரணத்தால், வெறும் ஓரிரு வாரங்களிலேயே ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது.

இதனை உலக நாடுகள் எதுவும் சற்றும் எதிர்பார்க்கவில்லை எதிர்வரும் 31 தேதி அதாவது நாளை மறுநாள் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் அனைத்தும் முழுமையாக வெளியேற உறுதி அளித்து இருந்த சூழ்நிலையில், அதற்குள் அனைத்து வெளிநாட்டினரும் அவரவர் நாட்டிற்கு அழைத்துச் செல்ல இயலுமா என்ற கேள்வி பூதாகரமாக இருந்தது.

இந்த சூழ்நிலையில், இந்த விவகாரத்தில் தாலிபான்கள் அளித்திருக்கின்ற உத்தரவாதம் தொடர்பாக அமெரிக்கா, பிரிட்டன் உட்பட 90 க்கும் அதிகமான நாடுகள் ஒரு கூட்டறிக்கை வெளியிட்டு இருக்கின்றனர். அப்படி வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் அனைத்து அயல்நாட்டினர் மற்றும் அயல் நாட்டிற்கு செல்ல உரிய பயண அனுமதி வைத்திருக்கின்ற ஆப்கானிஸ்தான் குடிமக்களும் நாட்டிலிருந்து மிகப் பாதுகாப்பாக வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் என்று தாலிபான்கள் உறுதியாக தெரிவித்து இருக்கிறார்கள். எங்களுடைய நாட்டுக் குடிமக்களும் இவ்வளவு காலம் எங்களுடன் பணிபுரிந்த ஆப்கானிஸ்தான் குடிமக்களும் நாட்டில் இருந்து பாதுகாப்பாக வெளியேறுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தாலிபான்கள் உறுதி கொடுக்கின்றன எங்களுடைய நாட்டுக் குடிமக்களும் இவ்வளவு காலம் எங்களுடன் பணிபுரிந்த ஆப்கானிஸ்தான் குடிமக்களும், எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் சுதந்திரமாக வெளியே வர இயலும் இதனை உறுதி செய்ய நாங்கள் எல்லோரும் கடமைப்பட்டிருக்கிறோம் என்று தாலிபான்கள் தெரிவித்து இருக்கின்றன

எங்களோடு ஒன்றாக பணிபுரிந்த ஆப்கானிஸ்தான் குடிமக்களுக்கு தேவைப்படும் பயண ஆவணங்கள் கொடுக்கும் பணி தொடர்ந்து நடைபெறும் எந்த நாடுகளுக்கு எல்லாம் செல்ல தாலிபான்கள் அனுமதி அளித்திருக்கிறது என்பது தொடர்பாக எங்களுக்கு தெளிவாக விளக்கப்பட்டிருக்கிறது. தாலிபான்கள் இதுவரையில் அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையிலேயே இந்த கூட்டறிக்கை வெளியிடப்படுகிறது என்று அந்தக் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா, பிரான்ஸ் ஜெர்மனி, ஜப்பான், நியூஸிலாந்து, உக்ரைன், பிரிட்டன் என்று 90க்கும் அதிகமான நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டு இருக்கின்றன. இது அங்கே இருக்கக்கூடிய அயல் நாட்டவருக்கு சற்று நிம்மதியும், நம்பிக்கையும் கொடுக்கும் செய்தியாக இருக்கிறது. ஏனென்றால் சென்ற சில நாட்களுக்கு முன்னர்தான் ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதிக்குள் அமெரிக்க இராணுவம் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறவில்லை என்றால் மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று தலிபான்கள் தெரிவித்ததாக ஒரு தகவல் வெளிவந்தது.

ஆனாலும் இந்த தகவலை முற்றிலுமாக மறுத்த தாலிபான்கள் ஆகஸ்ட் மாதம் 31ம் தேதிக்கு பின்னரும் பொதுமக்கள் ஆப்கானை விட்டு வெளியேற அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்தார்கள். அதோடு இதுகுறித்து தாலிபான்களின் துணை இயக்குனர் ஷேர் முஹம்மது அப்பாஸ் சாய் தெரிவிக்கும்போது ஆப்கானிஸ்தானிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்ல விருப்பம் கொள்வோர் கௌரவமான முறையில் செல்வதற்கு அனுமதி வழங்கப்படும். பாஸ்போர்ட் மற்றும் விசா போன்ற தேவையான அனைத்து ஆவணங்களும் இருந்தால் போதும் விமான சேவை தொடங்கப்பட்ட உடன் அவர்கள் விரும்பும் இடங்களுக்கு அவர்கள் செல்லலாம் என்று தெரிவித்து இருந்தார்.

Previous articleதேர்தல் சமயத்தில் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிச்சயமாக நிறைவேற்றுவோம்! முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி!
Next articleஅடித்து கொடுமை செய்த கணவனை கொன்று விட்டு நாடகமாடிய மனைவி! போலீசார் கிடுக்கிப்பிடி!