காடுகளின் கலைகளஞ்சியத்திற்கு பத்ம ஸ்ரீ! 77 வயதில் இவர் செய்த அறிய சாதனை!

0
163
Padma Shri for the Encyclopedia of Forests! The record to know what he did at the age of 77!
Padma Shri for the Encyclopedia of Forests! The record to know what he did at the age of 77!

காடுகளின் கலைகளஞ்சியத்திற்கு பத்ம ஸ்ரீ! 77 வயதில் இவர் செய்த அறிய சாதனை!

நேற்று கடந்த வருடத்திற்கான பத்ம ஸ்ரீ, பத்ம விபூஷன், போன்ற விருதுகள் வழங்கும் விழா ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. அதில் இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளாக மொத்தம் 119 பேருக்கு அறிவிக்கப்பட்டது. அதில் மொத்தம் 7 பத்ம விபூஷன், 10 பத்ம பூஷன் மற்றும் 102 பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டு இருந்தன .
இதில் கர்நாடாகாவை சேர்ந்த துளசி கவுடாவும் ஒருவராக இருந்தார். இவருக்கு 77 வயதாகிறது. துளசி கவுடா கர்நாடகாவின் அங்கோலா தாலுக்காவின் ஹொன்னாலி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார். மேலும் இவர்  30,000 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்ட சுற்றுச்சூழல் ஆர்வலரும் ஆவார்.
கடந்த ஆறு தசாப்தங்களாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். 1944 ஆம் ஆண்டு  ஹக்கலி பழங்குடி குடும்பத்தில் பிறந்தவர்தான் இந்த துளசி கவுடா. காடுகளில் மரங்கள் மற்றும் தாவரங்களைப் பற்றிய விரிவான அறிவை அவர் கொண்டு இருப்பதால் காடுகளின்  கலைக்களஞ்சியம் என்று அனைவராலும் அழைக்கப்படுகிறார். மேலும் அவர் அங்குள்ள மக்களால் மரங்களின் தெய்வம் என்றும்  அழைக்கப்படுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதை தொடர்ந்து நேற்று நடந்த விழாவில் விருது வழங்குவதற்காக  இவரது பெயர் அழைக்கபட்டபோது ஜனாதிபதியை நெருங்கி வந்த அவர், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவு இருவருக்கும் கைகூப்பி தனது மரியாதையை செலுத்தினார்.
அதற்கு பதிலாக பிரதமர் நரேந்திர மோடியும், அமித்ஷாவும் அவரை நோக்கி கைகூப்பி பதில் மரியாதை செலுத்தினார்கள். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது
Previous articleநாளை கண்டிப்பாக ஹைட்ரஜன் குண்டு வீசுவேன்! எச்சரிக்கை செய்த மராட்டிய மந்திரி!
Next articleஅண்டை நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களுடன் பிரதமர் திடீர் சந்திப்பு!