பத்ம விபூசன் விருது பெற்ற பிரபல எழுத்தாளர் மறைவு! பிரதமர் தெரிவித்த இரங்கல்!

Photo of author

By Hasini

பத்ம விபூசன் விருது பெற்ற பிரபல எழுத்தாளர் மறைவு! பிரதமர் தெரிவித்த இரங்கல்!

பத்மவிபூஷன் விருது பெற்ற பிரபல எழுத்தாளர் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க ஆசிரியர் இன்று காலமாகிவிட்டார். மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி குறித்து தனது பல படைப்புகள் மூலம் மிகப் பெரும் புகழ் பெற்றவர் தான் பல்வந்த் மோரேஷ்வர் புரந்தரே என்கிற பாபாசாகேப் புரந்தரே. இவர் வரலாற்று ஆசிரியர் என்றும் புகழப்படுகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டில் இந்தியாவின் இரண்டாவது மிக உயரிய குடிமகன் விருதான பத்ம விபூஷன் விருதைப் பெற்றுள்ளார்.

இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வயது மூப்பு தொடர்பான உடல்நலக்குறைவு  ஏற்பட்டது. அதன் காரணமாக புனேவில் உள்ள பிரபல மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் மருத்துவ சிகிச்சையை ஏற்றுக்கொள்ளாததன் காரணமாக தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று நாட்களை கடந்து வந்தார்.

இந்நிலையில் தொடர்ந்து அவரது உடல் நிலை மோசமாகிக் கொண்டே இருந்தது. அதன் காரணமாக இன்று அதிகாலை 5 மணியளவில் பாபாசாகேப் காலமானார். அவருக்கு வயது 99 ஆகும். அவரது இறுதி சடங்குகள் வைகுண்ட சுடுகாட்டில் காலை 10:30 மணி அளவில் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில் இவ்வாறு வருத்தம் தெரிவித்திருந்தார். நான் வார்த்தைகளில் சொல்ல முடியாத அளவுக்கு வேதனைப்படுகிறேன். ஷிவ்ஷாஹிர் பாபாசாகேப் புரந்தரேவின் மறைவு, வரலாறு மற்றும் கலாச்சார உலகில் ஒரு பெரிய வெற்றிடத்தை விட்டுச் செல்கிறது. வரும் தலைமுறையினர் சத்ரபதி சிவாஜி மகாராஜுடன் மேலும் இணைந்திருப்பதற்கு அவருக்கு நன்றி. அவரது மற்ற படைப்புகளும் நினைவுகூரப்படும் என்று கூறியுள்ளார்.

மேலும் பாபாசாகேப் புரந்தரே உடலுக்கு அரசு மரியாதை செய்யப்படும் என்றும் மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.

https://twitter.com/narendramodi/status/1460079358748631040/photo/1?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1460079358748631040%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.dailythanthi.com%2FNews%2FIndia%2F2021%2F11%2F15102245%2FHistorian-Babasaheb-Purandare-Dies-At-99-PM-Modi-Pained.vpf