ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படும்! அரசு அறிவிப்பால் ஊழியர்கள் மகிழ்ச்சி!!

0
183
#image_title
ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படும். அரசு அறிவிப்பால் ஊழியர்கள் மகிழ்ச்சி.
நாளை கர்நாடக மாநிலத்தில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஊதியத்துடன் அனைவருக்கும் விடுமுறை அளிக்கப்படும் என்று கோவா அரசு அறிவித்துள்ளது. இந்த முடிவு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றது.
நாளை அதாவது 10ம் தேதி கர்நாடக மாநிலத்தில் சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதில் மாநிலத்தில் இரு பெரும் கட்சிகளான ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே ஆட்சியை கைப்பற்ற கடும் போட்டி நிலவுகின்றது.
நேற்று மாலையுடன் பரபரப்பான தேர்தல் பரப்புரை முடிவுக்கு வந்தது. இந்த தேர்தல் பரப்புரையில் நடிகர்கள், கட்சித் தலைவர் என பலரும் அவர்களின் கட்சிகளையும் கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து பேசி வாக்கு சேகரித்தனர். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அரசு பேருந்தில் பயணம் செய்து நேற்று வாக்கு சேகரித்தார். சில தினங்களுக்கு முன்னர் பிரதமர் மோடி அவர்கள் பாஜக கட்சிக்கு ஆதரவாக ரோடு ஷோ திட்டம் மூலம் 36 கிலோ மீட்டர் தூரம் பரப்புரை செய்து பாஜக கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பேசி வாக்கு சேகரித்தார்.
இந்த நிலையில் நாளை அதாவது மே 10ம் தேதி கர்நாடகத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக கோவா அரசு மாநிலத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அறிவித்துள்ளது. அண்டை மாநிலங்களில் தேர்தல் நடக்கும் பொழுது விடுமுறை அளிப்பது வழக்கமாக இருந்தாலும் எதிர்க் கட்சிகள் இந்த அறிவிப்பை குற்றம் சாட்டி வருகின்றனர்.
Previous articleதமிழகத்தில் மகளிர் டி20 கிரிக்கெட் லீக்! தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
Next articleஐபிஎல் இன்றைய போட்டி! மும்பை பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை!!