வழிபாட்டுத் தலங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஐஎஸ் பயங்கரவாதிகள் அதிரடி கைது!

Photo of author

By Sakthi

பாகிஸ்தானில் பல்வேறு வழிபாட்டுத் தலங்களில் தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்ட ஐஎஸ் பயங்கரவாதிகள் 2 பேரை அந்த நாட்டுப் பாதுகாப்பு படையை சேர்ந்தவர்கள் கைது செய்ததாக அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். லாகூரில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கின்ற மியான்சன்னு பகுதியில் வழிபாட்டுத் தலங்களில் தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் பயங்கரவாதிகள் ஒரு சிலர் நடமாடுவது தெரிய வந்ததாக தெரிகிறது.

இதனை தொடர்ந்து பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தில் உள்ளூர் காவல் துறையினருடன் இணைந்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இதில் 2 பயங்கரவாதிகள் பிடிபட்டார்கள். பிடிப்பட்ட பயங்கரவாதிகளிடமிருந்து 2 கையெறி குண்டுகள், கைத்துப்பாக்கிகள், வெடிமருந்துகள் மற்றும் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தின் கொடிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.

தெஹ்ரீக் இ தலிபான் உட்பட பயங்கரவாத இயக்கங்களுடனான பாகிஸ்தான் அரசின் அமைதிப் பேச்சுவார்த்தை எந்த முடிவையும் எட்டப்படாமல் முடிவடைந்தது. அதிலிருந்து பாகிஸ்தானில் பயங்கரவாத செயல்கள் அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது.