பாகிஸ்தானில் 91 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து

Photo of author

By Ammasi Manickam

பாகிஸ்தானில் 91 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து

Ammasi Manickam

பாகிஸ்தானில் ஏர்பஸ் ஏ320 என்ற விமானம் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக விபத்துக்குள்ளாகியது. 

பாகிஸ்தானில் 99 பயணிகளுடன் சென்ற விமானம் தரையிறங்க சில நிமிடங்களுக்கு முன் விபத்துக்குள்ளாகியது. லாகூரில் இருந்து கராச்சியை நோக்கி சென்ற விமானம், கராச்சி அருகே கீழே விழுந்து நொறுங்கியது. இது குறித்த தகவலை ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

விபத்திற்குள்ளான இந்த விமானத்தில் 91 பயணிகள் உள்பட மொத்தம் 99 பேர் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கராச்சி அருகே, குடியிருப்பு பகுதிக்கள் மீது விழுந்து விமானம் விபத்தை சந்தித்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் இது குறித்து செய்தி வெளியிட்டுள்ளன.

சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள காட்சிகளின்படி,விபத்திற்குள்ளான இந்த விமானம் குடியிருப்பு பகுதிக்குள் விழுந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் இருந்து கரும்புகை கிளம்பி விண்ணை நோக்கி செல்லத் தொடங்கியுள்ளது. 

இந்நிலையில் இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் யாரும் உயிர் தப்பியதாக எந்த தகவலும் கிடைக்கவில்லை.