இந்தியாவுக்கு எதிராக சதி திட்டத்தில் பாகிஸ்தான்!! பின்னணியில் சீனா-துருக்கி நாடுகள்!!

Photo of author

By Sakthi

India:இந்தியாவுக்கு எதிராக தனது ராணுவத்தை பலப்படுத்தி வருகிறது பாகிஸ்தான்.

ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெரும் போது இந்தியாவில் இருந்து பிரிக்கப்பட்ட நாடு தான் பாகிஸ்தான். இருப்பினும் சுதந்திரம் பெற்ற நாள் முதல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடுமையான பிரச்சனை நிலவி வருகிறது. குறிப்பாக காஷ்மீர் மாநிலத்தை உரிமை கொண்டாடுவது இரு நாட்டு பிரச்சனைக்கு முக்கிய காரணமாக உள்ளது.

மேலும் பாகிஸ்தான் அரசு தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் அளித்து வருகிறது. இது மட்டுமல்லாமல் சீன அருணாசலபிரதேசம் மற்றும் லடாக் எல்லைப் பகுதிகளில் தங்களது ராணுவத்தினரை ஊடுருவ செய்து பிரச்சனைகள் உண்டாகி வருகிறது. மேலும் சீனா பாகிஸ்தானில் நிலவும் பொருளாதார நெருக்கடியை சாதகமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவத்தை வலுப்படுத்தும் பணியை மேற்கொண்டு வருகிறது.அந்த செயல் திட்டத்தை கையில் எடுத்து இருக்கிறது துருக்கி. இது இந்தியாவுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும்  துருக்கி அதிபர் ரேஹப் தையிப் எர்டோகன் இது தொடர்பாக தகவல் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் பாகிஸ்தான் பாதுகாப்பு துறைக்கு உதவி செய்ய தயாராக இருக்கிறோம் என்றும், பாதுகாப்பு துறை சார்ந்த ஆயுதங்களை தயாரிக்கும் ஆலையை பாகிஸ்தான் இஸ்தான்புல் பகுதியில் ஆரம்பிக்க உள்ளதாக தெரிவித்து இருந்தார். அடுத்த கட்டமாக பாகிஸ்தான் ராணுவத்துக்கு தேவையான ஆயுதங்கள், குண்டுகள், மிலிட்டரி கிரேட் ஹார்ட்வேர் பொருட்களை ஒப்பந்த அடிப்படையில் தயாரித்து வழங்கி வருகிறது துருக்கி. இது இந்தியாவிற்கு சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.