Aritapatti:அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக ஸ்டாலின் மீது கண்டனம் தெரிவித்து இருக்கிறார் பழனிசாமி.
மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி கிராமத்தில் உள்ள மலை குன்றுகளில் கனிம வளங்களை எடுக்க மத்திய அரசு டங்ஸ்டன் சுரங்கம் அமைத்து கொள்ள அனுமதி வழங்கி இருக்கிறது. இந்த அனுமதியை ரத்து செய்ய முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதி இருக்கிறார். அதில் அரிட்டாபட்டியில் உள்ள மலைக்குன்றுகள் வரலாறு சிறப்பு மிக்க இடங்கள் உள்ளது.
பாண்டிய மன்னர்கள் காலத்து குடைவரை கோயில்கள், சிற்பங்கள், சமண சின்னங்கள், தமிழ்பிராமி எழுத்துக்கள் மற்றும் பஞ்சபாண்டவர் கல்படுக்கைகள் ஆகியவைகள் உள்ளன. மேலும் பல்லுயிர் பெருக்க வரலாற்று ஸ்தலம் ஆகும். மேலும் கவட்டையம்பட்டி, எட்டிமங்கலம், வல்லாளப்பட்டி, கிடாரிப்பட்டி, நரசிங்கம்பட்டி ஆகிய பகுதிகளில் மக்கள் அதிக அளவில் வசித்து வருகிறார்கள்.
வணிக ரீதியாக சுரங்கம் அமைத்தால் அது அவர்களை பாதிக்கும். அதனால் ஒரு போதும் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க தமிழக அரசு அனுமதிக்காது என தெரிவித்து இருந்தார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அப்பதிவில் 2023 ஆம் ஆண்டு அரிட்டாபட்டியில் சுரங்கம் அமைக்க அனுமதி வாங்கியது ஸ்டாலின் அரசு.
இப்போது சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவிப்பது போல நாடகம் நடத்துகிறார் என குறிப்பிட்டு இருந்தார். இதற்கு முன்பாகவே பாமக அன்புமணி அவர்கள் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.