விரைவில் தமிழக மக்களுக்கு வெளியாக இருக்கும் இன்பமான செய்தி! அமைச்சர் சூசக தகவல்!

0
233

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28ம் தேதி தொடங்கி சென்ற வாரம் முடிவடைந்தது.இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி வருகிறார்கள். மேலும் கடந்த 6ம் தேதி வேட்பாளர்கள் வேட்பு மனுவை திரும்பப் பெறுவதற்கு கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு நாட்கள் நெருங்கி வருவதால் தேர்தல் பிரசாரங்களில் திமுக அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் மிகவும் பரபரப்பாக இறங்கியிருக்கின்றன.அதிலும் திமுக இந்த தேர்தலில் நிச்சயமாக 100 சதவீத வெற்றியை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் இறங்கியிருக்கிறது.

இந்த நிலையில், மதுரை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் திமுகவின் வேட்பாளர்களை ஆதரிக்கும் விதமாக ஆரப்பாளையத்தில் தமிழக நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பிரச்சாரம் செய்தார்.

அப்போது உரையாற்றிய அவர் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலை போலவே நகர்புற தேர்தல் மக்களுக்கு முக்கியமான தேர்தலாக இருக்கிறது. வளர்ந்த நாட்டை ஒப்பிடும்போது தமிழகத்தில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறைவாக தான் இருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அதிமுகவின் ஆட்சி காலத்தில் வார்டுகள் வரையறை செய்யப்பட்டிருக்கின்றன பெண்களுக்கு சமமான வாய்ப்பு கொடுக்கப்படுவதில்லை. தேர்தல் மூலமாக பெண்களுக்கு சம வாய்ப்புகள் வழங்கப்படுகின்றது.

மக்களுக்காக நிதியை ஒதுக்கீடு செய்வதில் எனக்கு எந்தவிதமான இடையூறுமில்லை நிதியை வைத்து ஊழல் செய்த ஆட்சி 10 ஆண்டுகளாக நடைபெற்று கொண்டிருந்தது என தெரிவித்திருக்கிறார் நிதியமைச்சர்.

நிதி விவகாரத்தில் எதிர்வரும் நிதிநிலை அறிக்கை தாக்கலின் போது ஒரு சில மாற்றங்களைக் கொண்டு வரவிருக்கிறேன் 8 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு எதிர்வரும் நிதிநிலை அறிக்கையை தாக்கலின் போது பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் அறிவிக்கப்படும். தமிழ்நாட்டை முதல் மாநிலமாக மாற்ற பாடுபட்டு வருகிறோம் என்று தெரிவித்திருக்கிறார்.

ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் 2 முறை தேர்தலில் வெற்றி பெற்று வருகின்றேன் பொதுமக்களின் எதிர்காலத்திற்கு யார் ஆட்சிக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்று சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார் அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன்.

Previous articleமக்களே இவைகளிடமிருந்து விலகி இருங்கள்! இந்த விலங்குகளுக்கு ஒமைக்ரான் உறுதி!
Next articleநீர்நிலைகளை ஆக்கிரமிப்பவர்களுக்கு சரியான பதிலடி! உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here