குழந்தைகள் தவறு செய்யும் பட்சத்தில் பெற்றோர்கள் இதை ஏற்க வேண்டும்! அரசு கொண்டு வந்த சிறப்பான திட்டம்!

0
145
Parents must accept this if their children make a mistake! The best plan brought by the government!
Parents must accept this if their children make a mistake! The best plan brought by the government!

குழந்தைகள் தவறு செய்யும் பட்சத்தில் பெற்றோர்கள் இதை ஏற்க வேண்டும்! அரசு கொண்டு வந்த சிறப்பான திட்டம்!

குழந்தைகளின் தவறான நடத்தை அல்லது குற்ற செயல்களுக்கு பெற்றோர்களுக்கு தண்டனை வழங்கும் வகையில் தற்போது புதிய சட்டம் ஒன்றை கொண்டு வர சீன நாடாளுமன்றம் பரிசீலித்து வருகிறது. சீனாவில் குடும்ப கல்வி ஊக்குவிப்பு சட்டம் என்ற வரைவு ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் குழந்தைகளின் தவறான நடத்தைகளுக்கு பெற்றோரை பொருப்பாக்குவதுடன், குழந்தை வளர்ப்பு பற்றிய வகுப்புகளுக்கும் அவர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

பெற்றோர்கள் மட்டுமல்லாமல் குழந்தைகளின் பாதுகாவலர்களுக்கும் இந்த சட்ட திட்டங்கள் பொருந்தும் எனவும் தகவல்கள் தெரிவிக்கப் பட்டுள்ளது. விரைவில் நாடாளுமன்ற நிலைக்குழு இந்த சட்ட முன் வடிவை ஆய்வு செய்யவும் உள்ளது. பெற்றோர் குழந்தைகளிடம் நேரத்தை செலவிட வேண்டும், விளையாட வேண்டும், உடற்பயிற்சி செய்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட வேண்டும் என்றும் இந்த சட்டம் பரிந்துரை செய்கின்றது.

வார இறுதி நாட்களான வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே ஆன்லைன் விளையாட்டுகளை சிறுவர்கள் விளையாட வேண்டும் என்றும் சமீபத்தில் தான் சீன கல்வித் துறையின் அமைச்சகம் புதிய கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தியது. அதே போல் வீட்டுப் பாடங்கள் மற்றும் வார இறுதி நாட்கள், விடுமுறை தினங்களில் பள்ளி முடிந்த பிறகான பயிற்சி வகுப்புகள் நடத்தவும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மாணவர்களின் கல்விச் சுமையைக் குறைக்கும் வகையில் சீன அரசு இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இது நல்ல திட்டம் தான். நமது நாட்டிலும் கூட இதை பரிசீலித்து மாற்றங்கள் கொண்டு வந்தால் பரவாயில்லை என்று தான் பெரும்பான்மையான பெற்றோர் நினைக்கிறார்கள். ஏனெனில் தற்போதுள்ள கால சூழ்நிலையில் யாரும் குடும்பத்துடன் நேரம் செலவிடுவதே இல்லை. இப்படி செய்தாலே பெரும்பான்மையான  குற்றங்கள் தவிர்க்கப்படும். உலக மக்கள் தொகை கணக்கில் முதலிடத்தை சீனா பெற்று இருந்தாலும், மக்களுக்கு இது மாதிரியான திட்டங்களை செயல்படுத்துவதிலும் சீனா எப்போதும் முன்மாதிரியாக திகழ்கிறது.

Previous articleவங்காளத்தில் வெடித்த வன்முறை! 20 இந்துக்களின் வீடுகள் தீக்கிரையாகின!
Next articleநான்கு நிறங்களில் காணப்பட்ட வாழைபழங்கள்! அதுவும் ஒரே தாரில் அதிசயம்தானே!