ஆஸ்கர் லைப்ரரியில் இடம்பெற்ற பார்க்கிங் திரைப்படம்! ஹரிஷ் கல்யாண் தகவல் 

Photo of author

By Janani

ஆஸ்கர் லைப்ரரியில் இடம்பெற்ற பார்க்கிங் திரைப்படம்! ஹரிஷ் கல்யாண் தகவல் 

Janani

Updated on:

Parking Movie

ஆஸ்கர் லைப்ரரியில் இடம்பெற்ற பார்க்கிங் திரைப்படம்! ஹரிஷ் கல்யாண் தகவல்

ஹரிஷ் கல்யாண் நடித்த பார்க்கிங் திரைப்படம் ஆஸ்கர் லைப்ரரியில் இடம் பெற்றுள்ளது.

பார்க்கிங் திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் 1ம் தேதி ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், எம். எஸ்.பாஸ்கர், இந்துஜா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியது. இந்த படம் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 17 கோடி ரூபாய் வரை பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்தது.

ஹரிஷ் கல்யாண் தனக்கு வந்த ஸ்டார் பட வாய்ப்பை மறுத்து பார்க்கிங் என்ற திரைப்படத்தில் நடித்தார். இதனால் அவருக்கு ஏகப்பட்ட எதிர்ப்புகள் கிளம்பியது. இந்நிலையில் ஹரிஷ் கல்யாண் தோனி தயாரிப்பில் நடித்த எல்ஜிஎம் திரைப்படம் பெரிய வெற்றியை பெறவில்லை. அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு இறுதியில் பார்க்கிங் திரைப்படம் ஹரிஷ் கல்யாணுக்கு ஒரு நல்ல படமாக அமைந்தது.

இவர் அமலாபால் அறிமுகமான சிந்து சமவெளி படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர். பின்னர் பிக் பாஸ் சீசன் 1இல் போட்டியாளராக பங்கேற்று பிரபலமடைந்தார். பின்னர் ரைசா வில்சன் ஜோடியாக பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தார். பின்னர் இஸ்பெட் ராஜாவும் இதய ராணியும், தனுசு ராசி நேயர்களே, தாராள பிரபு உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியான பார்க்கிங் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுகளை குவித்தது. இருப்பினும் பார்க்கிங் திரைப்படம் வசூல் ரீதியாக பெரும் பெரிய வெற்றியை அடையவில்லை. ஓ.டி. டியில் வெளியான பின்னர் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்தனர். தற்போது இந்த படம் ஆஸ்கர் லைப்ரரியில் இடம் பெற்றுள்ளதாக ஹரிஷ் கல்யாண் தெரிவித்துள்ளார்.