DMK:கோவை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜி-யை வரவேற்று பேசியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின், 2021 தமிழக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பல்வேறு மாவட்டங்களில் நேரில் சென்று பல திட்டங்களை தொடங்கி வைத்து இருக்கிறார். அந்த வகையில் கோவை மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கோவை காந்திபுரம் சிறைச்சாலை மைதானத்தில் கட்டப்பட்டு வரும் செம்மொழி பூங்கா பணிகளை ஆய்வு செய்தார்.
பின்பு பள்ளி கல்வித்துறை சார்பில் 8 தளங்களுடன் 1,98,000 சதுர அடி பரப்பளவில் அமையவுள்ள மாபெரும் நூலகம் மற்றும் அறிவியல் மையத்திற்கு அடிக்கல் நாட்டினார். மேலும் தமிழ் புதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்தார். புதிதாக கட்டப்பட்டு வரும் தகவல் தொழில்நுட்ப பூங்கா திறப்பு விழாவில் அமைச்சர் செந்தில் பாலாஜியை சிறப்பிக்கும் வகையில் பேசினார்.
அதில் கோவை மாவட்டத்திற்கு சிறப்பாக செயல்பட்டு வந்தார். சில காரணங்கள் அது தடைபட்டு விட்டது அதைப்பற்றி நான் இப்போது பேசவில்லை, எனவே மீண்டும் கோவை மாவட்டத்திற்கு மக்கள் பணி செய்ய வந்து இருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி. என்று கூறியிருக்கிறார். வருமானவரித் துறை தொடுத்த வழக்கில் குற்றம் கைதாகி ஒரு ஆண்டு சிறையில் இருந்தார் செந்தில் பாலாஜி.
பிறகு ஜாமீன் பெற்று வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இருப்பினும் மீண்டும் அவரை அரவணைத்து முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் அவருக்கு பதவி கொடுத்தார். அவர் ஏற்கனவே இருந்த மின்சார துறை வழங்கப்பட்டு இருக்கிறது. இது திமுக கட்சியில் கவனம் பெற்று இருக்கிறது.