பசுபதி பாண்டியன் வழக்கில் பழி வாங்கும் செயலாக பெண்ணை வெட்டி கொடூர கொலை!

0
276
Pashupati Pandian case: Woman hacked to death in retaliation
Pashupati Pandian case: Woman hacked to death in retaliation

பசுபதி பாண்டியன் வழக்கில் பழி வாங்கும் செயலாக பெண்ணை வெட்டி கொடூர கொலை!

தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனர் ஆக இருந்தவர் பசுபதி பாண்டியன். இவரை கடந்த 2012 ஆம் ஆண்டு திண்டுக்கல் நந்தவனப்பட்டியில் அவரது வீட்டில் வைத்தே படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை வழக்கில் தூத்துக்குடியை சேர்ந்த சுபாஷ் பண்ணையார் உள்பட 16 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.

இந்த 16 பேர் கொண்ட பட்டியலில் 8வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர் நிர்மலாதேவி என்ற 60 வயதான பெண். இவரும் நந்தவனப்பட்டியைச் சேர்ந்தவர்தான். பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் குற்றவாளியான நிர்மலாதேவியை தற்போது மர்ம நபர்கள் படுகொலை செய்துள்ளனர்.

கொலை செய்து விட்டு, அதன் பின்னர் அவரின் தலையை மட்டும் தனியாக துண்டித்து எடுத்து வந்து, பசுபதி பாண்டியனின் வீட்டின் முன்பு மர்மமான முறையில் போட்டு விட்டு சென்றுள்ளனர். இதை அறிந்து திண்டுக்கல் தாடிக்கொம்பு பகுதியைச் சேர்ந்த போலீசார் விரைந்து வந்து அந்தத் தலையை மீட்டு சென்று அதன் பின்னர் அவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து தீவிர விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleவிண்வெளிக்கு மனிதனை தற்போது அனுப்ப முடியாது! வருத்தம் தெரிவித்த திட்ட இயக்குனர்!
Next articleஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு இருந்த ஆணுறைகள்! அந்த வழக்கில் துப்பு துலக்கிய போலீஸ்!