மாதாந்திர ரயில் டிக்கெட் வாங்குவது இனி சுலபம் அல்ல.. புதிய அறிவிப்பு என்னன்னு தெரியுமா!!

0
45

தமிழகத்தில் பேருந்து, ரயில் மற்றும் விமானம் போன்ற சேவைகள் உள்ள நிலையில் பொதுமக்கள் தினந்தோறும் அதிகளவு பயன்படுத்தக்கூடிய போக்குவரத்தாக இருப்பது ரயில் சேவை. அவ்வாறு தினந்தோறும் பயணிக்கும் பயணிகள் மாதாந்திர பயண சீட்டு பெறுகின்றனர்.

தமிழன் முழுவதும் ரயில்வே துறை சார்பாக பல்வேறு பகுதிகளுக்கு ரயில் இயக்கப்பட்டு வருகின்றது மேலும் தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில்களும் கூடுதல் ரயில்களும் இயக்கப்படுவதினால் பயணிகள் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர் அதன் காரணமாக ரயில்வே துறை சார்பாக பல்வேறு வசதிகள் ஏற்பாடு செய்து தரப்படுகின்றது வாட்ஸ் அப் மூலம் டிக்கெட் பெறுவது மாதாந்திர டிக்கெட், முன்பதிவு செய்து கொள்வது உள்ளிட்டவை அடங்கும்.

மேலும் ரயில் நிலையங்களில் சென்று மாதாந்திர பயண சீட்டுக்கான தொகையை செலுத்தினால் பயண அட்டையை பெற முடியும். ஆனால் தற்போதுள்ள சூழலில் பயணிகள் பயணச்சீட்டு மற்றும் மாதாந்திர பயண சீட்டு பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. பல்வேறு ரயில் நிலையங்களில் செயலி மூலம் மட்டும் பணம் செலுத்தி பயணச்சீட்டு பெற முடியும். மாதாந்திர பயண அட்டை தருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் பயணிகள் மட்டுமே தற்போது மாதாந்திர பயண அட்டை யுபிஐ செயலி மூலம் பணம் செலுத்தி பெற்று வருகின்றனர்.

போன் இல்லாத பயணிகள் பயண அட்டை பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ரயில்வே துறையினரால் எண்ம செயலி பரிவர்த்தனைகள் மேற்கொள்ள கட்டாயப்படுத்துவதாகவும் பயணிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். அதனால் உடனடியாக இதற்கு தீர்வு காண வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Previous articleஇந்தியாவுக்கு எதிரான பேச்சுக்களுக்கு பெயர் போன ஜெய்ஷ் இ-முகமது அமைப்பின் தளபதி உயிரிழப்பு!!
Next articleவிஜய்யால் அழகிரி காலை பிடிக்கும் ஸ்டாலின்.. உன்னை விட்டால் வேறு ஆளு இல்லை!!