பயணிகள் இனி ரயிலில் இவ்வளவு நேரம் தான் தூங்க வேண்டும்.. வந்தது புதிய கட்டுப்பாடு!!
இந்தியாவில் உள்ள மக்கள் தங்கள் வேலைவாய்ப்பின் காரணமாக பல்வேறு மாநிலங்களுக்கு சென்று பணியாற்ற வேண்டியுள்ளது.இந்த சமயங்களில் மக்கள் போக்குவரத்து பயணத்திற்கு பெரிதும் நம்பி இருப்பது ரயில்வே பயணத்தை தான்.அதேபோல் வெளியூர்களுக்கு தங்களது சொந்த விஷயங்களுக்காக செல்லும் மக்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. இவர்கள் பெரும்பாலும் ரயில் பயணங்கள் மேற்கொள்ளும் போது ஸ்லீப்பர் மற்றும் ஏசி பெட்டிகளை தான் அதிகளவில் உபயோகிக்கிறார்கள்.
அந்த வகையில் பயணிக்கும் போது ஏசி பெட்டிகளில் உள்ள பயணிகள் தூங்கும் நேரம் என்பது இரவு 9 மணியிலிருந்து காலை 6 மணி வரை என வரையறுக்கப்பட்டு இருந்தது.இதனால் Upper கோச் மற்றும் Lower கோச் பயணிகளுக்கு கடும் சிரமங்கள் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது .அதாவது ஸ்லீப்பர் மற்றும் ஏசி பெட்டிகளில் விடிந்த பிறகும் கூட அதிக நேரம் பயணிகள் தூங்குவதால் தங்களால் ரயில்களில் உக்கார முடியாத சூழல் நிலவுவதாக கூறப்படுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு இந்திய ரயில்வே துறை தற்போது அதிரடியான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.அதாவது இனிமேல் ரயில்களில் உள்ள ஸ்லீப்பர் மற்றும் ஏசி கோச்களில் உறங்கும் நேரத்தை இரவு 10 மணியிலிருந்து காலை 6 மணி வரை என்கின்ற வகையில் மாற்றம் செய்துள்ளது.இதனால் வழக்கத்தை விட ஒரு மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது.மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என ஒரு சிலர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.