திடீரென்று வந்த இரயிலால் அதிர்ந்த பயணிகள்! 90 அடி பள்ளத்தில் குதிக்கும் வீடியோ வைரல்! 

Photo of author

By Sakthi

திடீரென்று வந்த இரயிலால் அதிர்ந்த பயணிகள்! 90 அடி பள்ளத்தில் குதிக்கும் வீடியோ வைரல்!
புகைப்படம் எடுக்க கணவன், மனைவி இருவரும் பாலத்தில் நடந்து சென்ற பொழுது திடீரென்று இரயில் வந்ததால் பயத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் அந்த தம்பதி 90 அடி பள்ளத்தில் குதித்தனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.
தற்போதைய காலத்தில் அடிப்படை தேவைகள் இருக்கின்றதோ இல்லையோ அனைவரும் ஒரு ஸ்மார்ட்போன் வைத்துக் கொண்டு ரீல்ஸ் செய்வதை அடிப்படையாக வைத்துக் கொண்டுள்ளனர். அனைவரும் ஆபத்தை உணராமல் இரயில் முன் செல்பி எடுப்பது, மலை உச்சியில் சென்று நின்று செல்பி எடுப்பது போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபட்டு தங்களுடைய உயிரையும் பறி கொடுக்கின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலத்தில் இது போன்ற சம்பவம் நடந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தில் உள்ள ஒரு இரயில்வே பாலத்தில் கணவன் மற்றும் மனைவி இருவரும் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த பாலத்தில் திடீரென்று இரயில் வந்ததால் என்ன செய்வது என்று தெரியாமல் பயத்தில் உயிரை காப்பாற்றிக் கொள்ள கணவன் மற்றும் மனைவி இருவரும் 90 அடி பள்ளத்தில் குதித்தனர்.
இது தொடர்பான வீடியோ தற்பொழுது வெளியாகி இணையத்தில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தங்களுடைய உயிரை காப்பாற்றிக் கொள்ள 90 அடி பள்ளத்தில் குதித்த தம்பதி சிறிய காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
விசாரணை நடத்திய காவல்துறையினர் இது தொடர்பாக “ஹரியாமாலி என்ற கிராமத்தை சேர்ந்த 22 வயதான ராகுல் மேவாரா மற்றும் 20 வயதான அவருடைய மனைவி ஜான்வி இருவரும் சுற்றுலா வந்துள்ளனர். அப்பொழுது இருவரும் இரயில் பாதையில் நடந்து சென்று பாலத்தில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர்.
அப்பொழுது காம்லிகாட் இரயில் நிலையத்தில் இருந்து மார்வாட் பயணிகள் இரயில் வந்தது. இரயிலில் வேகம் குறைவாகத்தான் இருந்தது. அதனால் இரயில் பாலத்தில் நின்று விட்டது. ஆனால் இரயில் வருவதை பார்த்த தம்பதி பயத்தில் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள பள்ளத்தில் குதித்தனர்” என்று கூறினார்.
இதையடுத்து 90 அடி பள்ளத்தில் குதித்த தம்பதியை மீட்டு இரயில் ஓட்டுநர் மற்றும் காவல்துறையினர் இருவரும் சேர்ந்து புலாட் இரயில் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலமாக அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.