Passport: மக்கள் பாஸ்போர்ட் கிடைக்க இனி பொது சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம் என சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மக்களுக்கு வெளியில் செல்ல தேவைப்படும் முக்கியமான ஆவணங்களில் ஒன்று பாஸ்போர்ட். இதனை இப்போது மக்கள் எளிதில் பெற அரசு வழிவகை செய்துள்ளது. அது என்னவென்றால் உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள பொது சேவை மையங்களில் இந்த பாஸ்போர்ட் அப்ளை செய்ய முடியும்.
அதற்கான வழிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மக்கள் பாஸ்போர்ட் எங்கு சென்று அப்ளை செய்வது என்று குழப்பம் தேவை இல்லை. இந்த முறையை பயன்படுத்தி மக்கள் எளிதில் பாஸ்போர்ட் பெற்றுக்கொள்ளலாம். அது மட்டும் அல்லாமல் தமிழகத்தில் ஆண்டுக்கு 9 லட்சமும், சென்னையில் மட்டும் 4 லட்சம் பாஸ்போர்ட்டுகள் வழங்கப்படுகிறது.
மேலும் இந்த பாஸ்போட் இணையத்தில் மூலம் எளிதாக அப்ளை செய்து கொள்ளலாம். மேலும் பாஸ்போர்ட் அப்டேட் செய்து கொள்ளலாம். அதற்கு அங்கு உதவி செய்ய அதற்கான அலுவலர்கள் இருப்பார்கள். பாஸ்போர்ட் புதுப்பிக்க விரும்புவோரும் இந்த பொது சேவை மையத்தை பயன்படுத்திக்கொள்ளலாம் .
இந்த முறையின் மூலம் மக்களுக்கு பாஸ்போர்ட் வழங்கும் காலதாமதம் தடுக்கப்படுகிறது. இதனால் மக்கள் எளிதாக பாஸ்போர்ட் அப்ளை செய்து கொள்ளலாம்.