வட தமிழக பெண்களை மட்டுமே குறிவைப்பது ஏன்? பா ரஞ்சித் முகத்திரையை கிழித்த இயக்குனர் மோகன்

0
186

வட தமிழக பெண்களை மட்டுமே குறிவைப்பது ஏன்? பா ரஞ்சித் முகத்திரையை கிழித்த இயக்குனர் மோகன்

கடந்த 2012 ஆம் ஆண்டு வெளிவந்த அட்டகத்தி படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் தான் பா.ரஞ்சித். பின்னர் அவரது இயக்கத்தில் மெட்ராஸ்,கபாலி,காலா உள்ளிட்ட படங்கள் தமிழில் வெளியாகி உள்ளன. ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி மற்றும் காலா படத்திற்கு பிறகு தமிழ் திரையுலகில் பிரபலமாகினார்.

இந்நிலையில் தன்னுடைய தலித் சமுதாயம் சம்பந்தமான கருத்துக்களை அவருடைய படங்களில் தெரிவிக்க வசதியாக “நீலம் புரொடக்சன்” என்ற பெயரில் சொந்த திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தையும் ஆரம்பித்தார். இதன் மூலமாக தன்னுடைய கருத்துக்கு ஏற்றவாறும் தனக்கு கீழ் பணியாற்றியவர்களையும் இயக்குனராக அறிமுகம் செய்து வைத்துள்ளார். அந்த வகையில் தன்னுடன் பணியாற்றிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் பரியேறும் பெருமாள் என்ற படத்தை அவரது முதல் படமாக தயாரித்தார்.

இதனையடுத்து தற்போது அவருடைய அடுத்த தயாரிப்பாக இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு என்ற படம் தற்போது வெளியாகியுள்ளது. பா.ரஞ்சித்துடன் பணியாற்றிய அதியன் ஆதிரையின் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ்,ஆனந்தி,முனிஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் தமிழ் திரையுலகில் ஓரளவு பிரபலமாகி வரும் இவருடைய படங்களில் தொடர்ந்து சாதிய கருத்துக்களை திணித்து வருகிறார் என்று குற்றசாட்டும் எழுந்து வருகிறது. இவர் இயக்கிய மற்றும் இவரது தயாரிப்பில் வெளிவந்த அனைத்து படங்களிலுமே தொடர்ந்து ஒரு சமுதாய மக்களை மிகவும் கொடுமை செய்பவர்கள் போலவும், அந்த சமுதாயத்தை சார்ந்த பெண்களை மட்டுமே காதலிப்பது போலவும், அவர்கள் காதலுக்கு எதிரானவர்கள் போலவும் கதை அமைத்து எடுத்து வருகிறார் என்றும் ஒரு சாரார் குற்றம் சாட்டி வருகின்றனர்.

குறிப்பாக பெண்களை விரட்டி விரட்டி காதல் செய்யும் “நாடக காதல்” கலாச்சாரத்தை இவரது படங்களில் ஊக்குவிப்பதாக விமர்சனம் செய்யப்படுகிறது.தமிழகத்தில் சமீபத்தில் நடந்த பெரும்பாலான பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு இது போன்ற விரட்டி விரட்டி செய்யப்படும் நாடக காதலே மூலக் காரணமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தொடர்ந்து பா.ரஞ்சித் தற்போது வெளியான இந்த படத்திலும் அவ்வாறான கதையை திணித்துள்ளது பெரும்பாலான மக்களிடத்தில் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இவர் தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட அதாவது வட தமிழகத்தில் வாழும் பெண்களை மையப்படுத்தியே படம் எடுத்து வருவதாக பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் இயக்குனர் மோகன் விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து இயக்குனர் மோகன் தன்னுடைய ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது. “திருவள்ளூர், வடசென்னை, திருநெல்வேலி, விழுப்புரம் போன்ற ஊர்களில் எல்லாம் உள்ள சமூகங்களின் பெண்களை காதலிப்பது போல காட்டியாச்சி.. எப்ப சார் மயிலாப்பூர் பக்கம் மதுரை பக்கம் உள்ள சமூகத்தின் பெண்களை கதாநாயகியாக காட்டி காதல் பண்ணுவீங்க @beemji.. ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்..” என்றும் இயக்குனர் பா.ரஞ்சித்திடம் கேள்வியெழுப்பியுள்ளார்.

அவருடைய கருத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் பெரும்பாலான நபர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதில் இயக்குனர் மோகன் தெரிவித்துள்ள கருத்து சரியென்றே பெரும்பாலான நபர்கள் பதிவிட்டு வருகின்றனர். கலையாக பார்க்க வேண்டிய திரைப்படத்தின் மூலமாக தன்னுடைய சொந்த கருத்துக்களை திணிக்க முயல்கிறார் பா. ரஞ்சித் என்றும் விமர்சனம் செய்து வருகின்றனர். எடுக்கும் எல்லா படங்களிலும் தனக்கு பிடிக்காத ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்களை தவறாக சித்தரித்து வருகிறார் என்றும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

யார் இந்த மோகன்? எதற்காக இதை விமர்சிக்கிறார்?

சமூக ஆர்வலரான இவர் யாருடைய தயவும் இல்லாமல் தன்னுடைய சொந்த முயற்சியால் பழைய வண்ணாரப்பேட்டை என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தன்னுடன் சார்ந்தவர்களுடன் இணைந்து தொடர்ந்து பல சமூக பணிகளை மேற்கொண்டு வருகிறார். இளைஞர்களின் எழுச்சி போராட்டமாக கருதப்படும் மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு விதை போட்டவரும் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

பா.ரஞ்சித் போன்ற இயக்குனர்கள் தமிழ் திரைப்படங்களில் பெண்களை சித்தரிக்கும் விதத்திற்கு மாறாகவும், இது போன்ற திரைப்படங்களால் தமிழக பெண்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பது பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திரௌபதி என்ற படத்தை இயக்கி வருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கிய மோகன் தற்போது இயக்கி வரும் திரௌபதி என்ற திரைப்படத்தில் பெண்களுக்கெதிராக நடைபெறும் வன்கொடுமைகள் மற்றும் காதல் என்ற பெயரில் நடைபெறும் குற்றங்கள் குறித்தும் பேசப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Previous articleகாஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் பிறந்து நான்கு நாட்களே ஆன குழந்தைக்கு முறையாக சிகிச்சை அளிக்காததால் குழந்தை உயிரிழப்பு
Next articleபேச்சிப்பாறை அருகே கால்வாயில் பரிதாபம்!