சினிமாவில் அதிகரித்து வரும் போலி சாதி ஒழிப்பு போராளிகளை எதிர்த்து களமாட தயாராகும் பிரபல இயக்குனர்

0
173

சினிமாவில் அதிகரித்து வரும் போலி சாதி ஒழிப்பு போராளிகளை எதிர்த்து களமாட தயாராகும் பிரபல இயக்குனர்

தமிழகத்தில் மட்டுமல்லாமல் தேசிய அளவிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் இந்த சூழ்நிலையில் பொது மக்கள் அனைவரும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும், மீண்டும் இது போன்ற குற்றங்கள் நிகழாமல் தடுக்க சட்டங்கள் கடுமையானதாக இயற்றப்பட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க சட்டம் வேண்டும் என்று பேசும் மக்கள் இது போன்ற குற்றங்களுக்கு என்ன காரணம் என்பதை ஆராய மறந்து விடுகின்றனர். நாட்டில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற பெரும்பாலான குற்றங்களுக்கு காரணமாக ஒரு தலைக் காதல், மது பழக்கம் போன்றவையே கூறப்பட்டு வருகிறது. இதில் இந்த ஒருதலைக் காதல் என்பது தற்போது தமிழகத்தில் நாடக காதலாக மாறி விட்டது என பெரும்பாலோனோர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் பெண்களின் விருப்பமில்லாமல் அவர்களை விரட்டி விரட்டி காதல் செய்வது போன்ற நாடக காதலை தமிழ் சினிமாக்கள் தொடர்ந்து ஆதரித்து வருகின்றன. தமிழக அரசியல் அமைப்புகள் சிலவும் சமூக நீதி என்ற பெயரில் இளைஞர்களை தவறாக வழி நடத்தி இது போன்ற சமூக சீர்கேடுகளை செய்ய ஊக்கப்படுத்தி வருகின்றனர். மாற்று சமூகத்து பெண்களை திருமணம் செய்ய வேண்டும் என்று பொது வெளியில் பிரச்சாரம் செய்யும் அளவிற்கு இந்த போலி சாதி ஒழிப்பு போராளிகள் சமுதாயத்தை சீரழித்து வருகின்றனர் என்றும் ஒரு தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய அல்லது அவரது சொந்த பட தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான படங்கள் என அனைத்திலும் வட தமிழகத்தில் வாழும் பெண்களை மட்டுமே குறி வைத்து காதல் செய்வது போல காட்சிகள் அமைப்பதாகவும், முடிந்தால் மதுரை பக்கம் உள்ள பெண்களை காதலிப்பது போல படம் எடுக்க முடியுமா என்று பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் இயக்குனர் மோகன்.ஜி சவால் விட்டிருந்தார். இது குறித்து அவர் ட்விட்டரில் தெரிவித்த கருத்துக்கு இயக்குனர் பா.ரஞ்சித் ஆதரவாளர்களும், சாதி ஒழிப்பு போராளிகள் என்ற பெயரில் உலவி வருபவர்களும் எதிர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதற்கு சாதியை ஒழிக்க போகிறேன் என்ற பெயரில் மற்றவர்களை விமர்சனம் செய்து கொண்டு மறைமுகமாக அவர்கள் சார்ந்த சமுதாயத்தினர் அனைவரும் ஒன்றிணைந்து வருகின்றனர் என்றும் இந்த போலி சாதி ஒழிப்பு போராளிகள் குறித்து எதிர் தரப்பினர் விமர்சனம் செய்கின்றனர். இதற்கு உதாரணமாக பா.ரஞ்சித் இயக்கம் மற்றும் தயாரிப்பில் வெளியான அனைத்து படங்களிலும் அவர் சார்ந்த சமுதாயத்தினர் தான் அதிகமாக பணியாற்றியுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் பா.ரஞ்சித்தின் இந்த போலி சாதி ஒழிப்பு நாடகத்தையும், அவர் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எதிராக செயல்பட்டு வருவதையும், பெற்றோர்களுக்கு எதிராக பெண்களின் மனநிலையை மாற்றுவது, விருப்பமில்லாத பெண்களை விரட்டி விரட்டி காதல் செய்வதை தூண்டும் விதமாக காட்சி அமைத்தது போன்றவற்றை விமர்சனம் செய்த இயக்குனர் மோகனுக்கு எதிராக கருத்து தெரிவிப்பதாக கூறி அவரது ஆதரவாளர்கள் அனைவரும் எதையெதையே குறிப்பிட்டு விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பெண்கள் பாதுகாப்பு குறித்து கருத்து தெரிவித்த மோகனுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் ஆதரவு பெருகி வருகிறது. இதனையடுத்து மீண்டும் இந்த விவகாரத்தை கையிலெடுத்த இயக்குனர் மோகன் ஜி ஒரே ஒரு ட்விட்க்கு அவ்வளவு கதறலா? இனி தொடர்ந்து இது போன்ற விழிப்புணர்வு பண்ணுவேன் என அவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது.

இந்த ஒரே ஒரு ட்விட்க்கு அவ்வளவு கதறல்.. ஏன்டா புள்ளைங்கள பெத்து வளர்கிறவங்க வலியை சொன்னா உங்களுக்கு அவ்வளவு கோபம் வருதா.. பெத்தவங்கள எதிரியாகவே காட்டி புள்ளைங்க மனச மாத்துற உங்க தந்திரம் இனி செல்லாது. விழிப்புணர்வு பண்ணுவேன். கதறுறவன் இன்னும் கதறு.. உங்க சித்தாந்தம் பலிக்காது இனி

https://twitter.com/mohandreamer/status/1204638442958680064

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் இந்த சூழ்நிலையில் இயக்குனர் மோகன் ஜி அவர்களின் இந்த கருத்துக்கு பெரும்பாலான பெற்றோர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் ஆதரவு கூடி வருகிறது. சினிமா என்ற கலையின் மூலம் மறைமுகமாக சமூகத்தை சீரழிக்கும் சில போலியான நபர்களின் முகத்திரை விரைவில் கிழியும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

 

Previous articleரஜினியின் அரசியலுக்கு அஜித் ஆதரவா? திடீர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டதால் பரபரப்பு
Next articleஒரே வருடத்தில் கணவரை விவாகரத்து செய்யும் தமிழ் நடிகை