உலகக் கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியை அறிவித்த பிசிபி!!! காயம் காரணமாக இளம் வேகபந்து வீச்சாளர் விலகல்!!!

Photo of author

By Sakthi

உலகக் கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியை அறிவித்த பிசிபி!!! காயம் காரணமாக இளம் வேகபந்து வீச்சாளர் விலகல்!!!

Sakthi

Updated on:

உலகக் கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியை அறிவித்த பிசிபி!!! காயம் காரணமாக இளம் வேகபந்து வீச்சாளர் விலகல்!!!

நடப்பாண்டுக்கான உலகக் கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடவிருக்கும் 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியை பாகிஸ்தான் கிரிக்கெட் போர்ட் அறிவித்துள்ளது. இந்த அணியில் காயம் காரணமாக இளம் வேகப்பந்து வீச்சாளர் இடம்பெறவில்லை.

நடப்பாண்டுக்கான 50 ஓவர் கொண்ட ஒருநாள் உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 5ம் தேதி தொடங்கி நவம்பர் 19ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு உலகக் கோப்பை தொடரை இந்தியா நடத்துகின்றது.

உலகக் கோப்பையை நடத்தும் இந்தியா, நடப்பு சேம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, நெதர்லாந்து ஆகிய பத்து அணிகள் இந்த ஆண்டுக்கான உலகக் கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடவுள்ளது.

உலகக் கோப்பை தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக பயிற்சி எடுத்து வருகின்றது. இந்நிலையில் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடும் பாகிஸ்தான் அணியை பாகிஸ்தான் கிரிக்கெட் போர்ட் அறிவித்துள்ளது.

தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் அணியில் ஆசியக் கோப்பை தொடரில் காயம் அடைந்து தேடலை விட்டு வெளியேறிய பாகிஸ்தான் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா அவர்கள் பெயர் இடம்பெறவில்லை. மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி உலகக் கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இடம் பெற்றுள்ளார்.

உலகக் கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி…

பாபர் அசம்(கேப்டன்), ஷதாப் கான்(துணை கேப்டன்), ஹசன் அலி, இப்டிகர் அஹமது, ஷாஹீன் ஷா அப்ரிடி, பக்கர் ஜமான், இமாம் உல் ஹக், முகமது ரிஷ்வான்(விக்கெட் கீப்பர்), அப்துல்லா ஷாபிக், சல்மான் அலி அஹா, சாத் சகீல், உசாமா மிர், முகமது நவாஸ், முகமது வாசிம் ,ஹாரிஸ் ராப்