அப்படியா செய்தி இல்லை இல்லை இது ஏமாற்றும் செயல்! ரஷ்யாவின் பதிலுக்கு அமெரிக்கா கடும் தாக்கு!

Photo of author

By Sakthi

ரஷ்யா தன்னுடைய அண்டை நாடான உக்ரைன் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது இதற்கு நடுவில் போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தையும் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் இரு நாடுகளுக்கிடையே போர் முடிவுக்கு வரவேண்டும் என்று துருக்கி விருப்பம் கொண்டது ஆகவே அந்த நாட்டின் இஸ்தான்புல் நகரில் நடந்த முதல் கட்ட பேச்சுவார்த்தையில் சாதகமான முடிவு எதுவும் எட்டப்படவில்லை.

இதற்கிடையே 2வது கட்ட பேச்சுவார்த்தை அதே இஸ்தான்புல் நகரில் நேற்று நடந்தது இந்த பேச்சுவார்த்தையின் போது உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் செர்னிக்கிவ் நகரின் ராணுவ நடவடிக்கை மிகத்தீவிரமாக குறைப்பதாக ரஷ்யா தெறிவித்தது.

இந்த சூழ்நிலையில், உக்ரைன் தலைநகரிலிருந்து ரஷ்ய படைகள் திரும்பப் பெறப்படவில்லை இடமாற்றம் மட்டுமே செய்யப்படுகிறது என்று பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்திருக்கிறார். அதோடு உக்ரைன் தலைநகர் கீவில் படைகள் குறைக்கப்படுவதாக ரஷ்ய அரசு கூறியிருப்பது ஏமாற்றும் செயல் என்றும் அவர் குறிப்பிட்ருக்கிறார்.