பொதுமக்களே உஷாராக இருங்க! தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை சேவைகள் பாதிக்கப்படுமா?

Photo of author

By Sakthi

வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவிருப்பதாக அறிவித்திருப்பதால் வங்கி சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்று பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்திருக்கிறது.

வரும் மார்ச் மாதம் 26ஆம் தேதி 4-வது சனிக்கிழமை விடுமுறை மற்றும் 27ஞாயிறு விடுமுறை அதோடு பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் இந்திய வங்கிகள் சங்கம் போன்ற பல்வேறு சங்கத்தை சார்ந்தவர்கள் எதிர்வரும் 28ஆம் தேதி மற்றும் 29ம் தேதி உள்ளிட்ட 2 தினங்களில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவிருப்பதாக அறிவித்திருக்கிறார்கள் ஆக மொத்தம் 4 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை என்று தெரிவிக்கப்படுகிறது.

வேலைநிறுத்தம் நடைபெறும் தினங்களில் வங்கி மற்றும் கிளை அலுவலகங்களில் இயல்பான செயல்பாட்டை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தாலும் இதனால் தங்களுடைய வங்கியின் சேவைகளில் குறைந்தaளவு பாதிப்பு உண்டாக கூடும் என்று பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்திருக்கிறது.