உஷார் படுத்தும் வானிலை ஆய்வு மையம்! இன்று இந்த 16 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் கனமழை!

0
138

தமிழ்நாட்டில் இன்று 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கின்ற அறிவிப்பில் தெற்கு ஆந்திரா பகுதிகளில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும், நகரத்தின் சில பகுதிகளில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

அதோடு கோவை, நீலகிரி, தேனி, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், சேலம், திருவண்ணாமலை, கரூர், வேலூர், ராணிப்பேட்டை. திருப்பத்தூர் மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதோடு புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக மேற்கு தாம்பரத்தில் 13 சென்டிமீட்டர் மழை பெய்திருக்கிறது. தரமணி, கொரட்டூரில் 11 சென்டி மீட்டர் மழையும், தாம்பரம், சென்னை விமான நிலையம் ஆலந்தூர், பூவிருந்தவல்லி, அண்ணா பல்கலைக்கழகம், ஸ்ரீபெரும்புதூர், டிஜிபி அலுவலகம், உள்ளிட்ட பகுதிகளில் 9 சென்டி மீட்டர் மழையும், பதிவாகி இருக்கிறது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleஎவராலும் அதிமுகவை அழிக்க முடியாது! நானே முன்னின்று காப்பேன் எடப்பாடிபழனிசாமி சபதம்!
Next articleவளர்ப்பு பூனைகளாலேயே கடித்து கொதறி கொலை செய்யப்பட்ட உரிமையாளர்!