மக்கள் தவிப்பு! ஆக்சிஜன் சிலிண்டர்கள் சென்னை வந்தது!
கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் நிலையில் கோரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவில் மிகுந்த தாக்கங்களை ஏற்படுத்தி உள்ளது.அதன் காரணமாக டெல்லி,மத்திய பிரதேசம்,உத்தர பிரதேசம்,மற்றும் தமிழ்நாடு ஆகியவை எண்ணிலடங்கா பாதிப்புகளை அடைந்துள்ளது. இதனை தொடர்ந்து இத்தாலி,ஜெர்மன்,இங்கிலாந்து நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு தேவையான உதவிகள் செய்கிறோம் என உலக நாடுகள் பல முன் வந்தது.வடமாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையாலும், மருத்துவமனைகளில் போதிய இட வசதி இல்லாமலும், தீ விபத்துக்களாலும் பலர் உயிரிழந்த அவல நிலை ஏற்பட்டது.பலதரப்பு மக்களும் நோய்வாய் படுவதாலும்,கட்டுக்கடங்காமல் கொரோனாவின் தாக்கம் அதிகரிப்பதாலும் ஆக்சிஜன் பற்றாக்குறை இந்தியாவில் அதிகளவு ஏற்பட்டுள்ளது.
மத்திய,மாநில அரசுகள் கலந்தாலோசித்து பல்வேறு முடிவுகளை செயல்படுத்துகின்றன.இதன் காரணமாக பல போராட்டங்களை கடந்து, பல உயிர்பலிகள் கொடுத்து மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெரிலைட் ஆலையை மூன்று மாதங்கள் மட்டும் ஆக்சிஜன் உற்பத்திக்காக திறந்து கொள்ளலாம் என நீதிமன்றத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இதனால் நாடு முழுவதிலும் அனைத்து ஆலைகளிலும் ஆக்சிஜன் உற்பத்தி செய்யவும் நீதிமன்றம் உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளது.இதை தொடர்ந்து ஆக்சிஜன் சேமித்து வைக்கும் கொள்கலன்கள்,மற்றும் சிலிண்டர்களும் இந்தியாவில் தட்டுப்பாடு நிலவும் நிலையில், விஷயம் அறிந்த வெளிநாடுகள் ஆக்சிஜன் சேமித்து வைக்கும் கண்டெய்னர்கள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்களை இந்தியாவிற்கு கொடுக்க திட்டமிடுள்ளது.
அதை தொடர்ந்து, ஜெர்மனியிலிருந்து இந்திய விமானப்படையின் சரக்கு விமானமான சி-17 ரக விமானத்தில் 4 கிரியோஜெனிக் ஆக்சிஜன் கண்டெய்னர்கள் மற்றும் பிரிட்டனில் உள்ள பிரைஸ் நார்டன் நகரில் இருந்து 900 ஆக்சிஜன் சிலிண்டர்களும் நேற்று சென்னையில் இறக்குமதி செய்யப்பட்டது.முதலில் திருவள்ளூருக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து ஆக்சிஜன் தட்டுப்பாடுகள் நிறைந்த பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.