மக்களே உஷார்:! பிரஞ்ச் code word மூலம் கொள்ளையடிக்க திட்டமிடும் கும்பல்!

0
119

மக்களே உஷார்:! பிரஞ்ச் code word மூலம் கொள்ளையடிக்க திட்டமிடும் கும்பல்!

நெல்லைமாவட்டத்தில் புறநகரில் உள்ள விஎம்.சத்திரம் மற்றும் ஆரோக்கியபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் புதிதாக வீடு கட்டி குடியேறி வருகின்றனர்.அப்பகுதிகளில் வீட்டின் கேட்டில்,சில புரியாத குறியீடுகளும்,வார்த்தைகளும் எழுதப்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்று ஒரு வீட்டில் குறியீடுகளையும்,ஆங்கிலத்தில் ஏதோ புரியாதது போல் எழுதி இருக்கும் வார்த்தை மற்றும் அந்த வீட்டின் கேட்டில் பெருக்கல் குறி போட்டு வட்டமிட்டு இருப்பதை கண்டு அச்சமடைந்து வீட்டு உரிமையாளர்,காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இந்த நிலையில் அப்பகுதியில் தீவிர விசாரணை செய்த காவல்துறையினர்,பெரும் பரபரப்பு அளிக்கும் தகவலை கூறியுள்ளனர்.

அந்தப் பகுதிகளின் பல வீடுகளின் கேட்டில் இதுபோன்ற குறியீடுகள் எழுதியிருப்பதும் கண்டறியப்பட்டது.பின்னர் அதில் எழுதியிருக்கும் எழுத்துக்களும் அந்த குறியீடுகளைப் பற்றியும் ஆய்வு செய்த காவல்துறையினர் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளனர்.
ஆங்கிலத்தை போன்று அதில் எழுதப்பட்டிருப்பது பிரெஞ்சு மொழி என்றும்,கூறியிருக்கின்றனர்.
அந்த வீடுகளின் கேடில் ,டைமென்ஸி மேற்றான் என்றும்,கே என்னும் சில குறியீடுகள் எழுதப்பட்டிருந்தது.தமிழ் மொழியில் டைமென்ஸி மேற்றான் என்றால் ஞாயிற்றுக்கிழமை காலை என்று பொருள்.கே என்பது பணத்தையும் குறிக்கும்.

இந்த குறியீடுகளின் அடிப்படையில் வைத்துப் பார்க்கும் பொழுது அந்த பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலையில் கொள்ளையடிக்கப்படும் என்றும் பெருக்கல் குறி போட்டு வட்டமிட்டிருக்கும் வீடுகளில் கொள்ளை அடிப்பதற்கு எந்தவிதமான பொருளும் இல்லை என்றும் அர்த்தமாகும்.இதனால் அப்பகுதிகளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு ரோந்து பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் இது குறித்து அப்பகுதி மக்கள் அச்சம் அடைய வேண்டாம் என்றும்,விரைவில் பிரஞ்ச் code word வைத்து கொள்ளையடிக்கும் கும்பலை கைது செய்வோம் என்றும் நெல்லை மாவட்ட காவல்துறையினர் கூறியுள்ளனர்.

Previous articleடி.என்.பி.எஸ்.ஸி தேர்வு கலந்தாய்வு குறித்து அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு
Next articleயார் இந்த க்யூட் குட்டி சிட்டி மைனம்மா?