மக்களே எச்சரிக்கை! இதை செய்தால் 500 ரூபாய் அபராதம்! இன்று முதல் அமல்!
தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,மக்களின் பொருளாதாரத்தை கருத்தில்கொண்டு பல்வேறு தளர்வுகள் உடன் எட்டாம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் சென்னை மாநகரத்தில் பல்வேறு கொரோனா தடுப்பு பணிகள் துரிதப்
படுத்தப்பட்டிருக்கின்றன.
இதனைத் தொடர்ந்து தற்போது சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அவர்கள் கடுமையான எச்சரிக்கை ஒன்றினை விடுத்துள்ளார்.
அதன்படி இன்று முதல் சென்னையில் பொது இடத்தில் எச்சில் துப்பினால், குப்பை கொட்டினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.மேலும் பொதுமக்கள் தங்கள் பகுதியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றும் நோய் பரவுவதற்கு நாமே காரணம் ஆகிவிடக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.இதுமட்டுமின்றி கொரோனா தடுப்பு விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.