மக்களே தவற விட்டுவிடாதீர்கள்:!இவர்களுக்கெல்லாம் 1000 ரூபாய் கொரோனா நிவாரணம்!!

0
146

மக்களே தவற விட்டுவிடாதீர்கள்:!இவர்களுக்கெல்லாம் 1000 ரூபாய் கொரோனா நிவாரணம்!!

கொரோனா பொது முடக்கத்தால்,பொதுமக்கள்,சிறு குறு வியாபாரிகள்,விவசாயிகள் என அனைவரின் பொருளாதாரமும் கேள்விக்குறியானது.கடந்த மார்ச் மாதத்தில் இருந்து தற்போது வரை பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில்,சென்னை மாநகருக்கு உட்பட்ட தெருவோர வியாபாரிகள்,வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாக கூறி,
தங்களுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்த்து தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அவர்கள் தெருவோர வியாபாரிகளுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என்று கூறியுள்ளனர்.சென்னை மாநகராட்சியின் பதிவு செய்யப்பட்ட தெருவோர வியாபாரிகளுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரண நிதியாக, வழங்கப்படும் என்றும் அவர்கள் தங்களது வங்கி கணக்கின் விவரங்களை சென்னை மாநகராட்சிக்கு வழங்குமாறும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Previous articleஎச்சரிக்கை விடுத்துள்ள உலகச் சுகாதார நிறுவனம்
Next articleவரலாற்று சிறப்புமிக்க கோசி ரயில் பாலம்: இன்று திறக்கிறார் பிரதமர் மோடி!