மக்களே சூப்பர் சான்ஸ்! இதை மட்டும் தவறவிடாதீர்கள்!

Photo of author

By Sakthi

குடும்ப அட்டைகளில் புதிய மாற்றம் கொண்டுவரப்படும் என்று தமிழக அரசின் சார்பாக தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதாவது தற்போதுள்ள குடும்ப அட்டையை வைத்து பலர் மோசடி செய்து பொருட்களை வாங்கி செல்வதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி விரைவில் குடும்ப அட்டைகளில் புதிய மாற்றத்தை கொண்டு வருவோம் என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தலைநகர் சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் இன்று முதல் ரேஷன் கார்டு சிறப்பு முகாம் நடைபெறும் என்று தமிழக அரசின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையில் குடும்ப அட்டை சிறப்பு முகாம் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அந்த சிறப்பு முகாமில் புதிய குடும்ப அட்டை பெறுவதற்கான மனுக்களை பதிவு செய்தல் சேவை நடைபெறும். ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்குவதற்காக வருகை தர இயலாத மூத்த குடிமக்களுக்கு அங்கீகாரம் சான்று வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், போன்ற திருத்தங்கள் செய்வது தொடர்பான பணியும் நடைபெறும் என்றும், தமிழக அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே சிறப்பு முகாமை பயன்படுத்திக்கொண்டு பொதுமக்கள் தங்களுடைய குடும்ப அட்டையில் திருத்தங்களை மேற்கொள்ள விரும்புவோர் அதனை செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்படுகிறது