சென்னை மக்கள் அலறி ஓட தேவையில்லை!! இப்போது எல்ல்லாம் மாறிவிட்டதா வெளிவந்த குட் நியூஸ்!!

Photo of author

By Jeevitha

சென்னை மக்கள் அலறி ஓட தேவையில்லை!! இப்போது எல்லாம் மாறிவிட்டதாம் வெளிவந்த குட் நியூஸ்!!

மழை காலம் வந்தால் போதும் தமிழ்நாடு மக்கள் அதிக சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். அதிலும் குறிப்பாக சென்னை மக்கள் மழை வந்தால் போதும் அலறி ஓடும் அளவிற்கு முன்பு நிலைமை சில ஆண்டுகளாக இருந்தது.மேலும் கொஞ்சம் மழை பெய்தால் போதும் பல பகுதிகள் நீரில் மூழ்கிவிடும். இந்த நிலைமை தான் இவ்வளவு நாள் வரை இருந்தது. ஆனால் தற்போது எல்லாம்  நிலைமையும் மாறிவிட்டது என கூறுகிறார்கள்.

தற்போது சென்னையில் போர்க்கால நடைவடிக்கை நடைபெற்று வருகிறது. இந்த  நிலையில் பாதிக்கப்படும் பகுதியில் மழைநீர் குழாயில் மழைநீர் சென்று விடுவதால் சாலையில் தேங்குவதில்லை.

ஆனாலும் ஒரு சில இடங்களில் மழைநீர் தேங்கும் நிலையே உள்ளது . அதனையடுத்து ஸ்பான்ச் பூங்கா திட்டத்தை மாநகராட்சி கையில் எடுத்துள்ளது. இனி சென்னையில் மழை ஒரு இடத்தில் கூட தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மழைநீரை உறிஞ்சும்  அந்த பூங்காக்கள் சாலையில் நடுவே தேங்கும்  மழைநீரை உறிஞ்சு விடுகிறது. அந்த மழைநீர் தேங்க பெரியகுளம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் குழாய் மூலம் வரும் தண்ணீன் அனைத்தும் குளத்தில் தேங்கும். இனிவரும், வடகிழக்கு பருவமழை முன்பு 42 ஸ்பாஞ்ச் பூங்காக்களை உருவாக்கும் பணியில் சென்னை மாநகராட்சி தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இதனால் நிலத்தடி நீர் மட்டம் பலமடங்கு அதிகரிக்கும். இதனால் சென்னைக்கு எதிர்காலத்தில் தண்ணீர் பிரச்சனை வராது என்று இயற்கை ஆர்வலர்கள் கூறிகிறார்கள்.