மணிப்பூரில்  வெடித்த  கலவரம் !! முதலமைச்சர் வீட்டுக்கு  தீ வைத்த போராட்டக்காரர்கள்!!

Photo of author

By Sakthi

Manipur:பயங்கரவாதிகளை ஒழிக்க கோரி மணிப்பூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

இந்தியாவின் வடகிழக்கு பிராந்தியங்களில்  வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் மணிப்பூரில் மீண்டும் அரசுக்கும் பொது மக்களுக்கும் இடையில் பிரச்சனை எழுந்துள்ளது. குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன் மணிப்பூரின் மழலைப் பகுதியில் உள்ள  ஒரு சமூக மக்களுக்கும் நகரத்தில் வாழக்கூடிய சமூகத்திற்கு இட ஒதுக்கீடு தொடர்பாக போராட்டங்கள் நடைபெற்றது.

இதில் போராட்டக்காரர்களால் ஜிரி பாம் மாவட்டத்தில் பழங்குடியின பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வன்முறையாளர்களால் எரித்துக் கொலை செய்யப்பட்டார்.  இச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த போராட்டம் இந்திய நாடு முழுவதும் அப்போது பேசு பொருளாக மாறியது என்பதை நாம் அனைவரும் அறிந்து இருப்போம். இந்த நிலையில் மீண்டும்  மணிப்பூரில் வன்முறை வெடித்து இருக்கிறது.

இந்த நிலையில் தான் மீண்டும் வன்முறையாளர்கள்  அதிகரித்து இருக்கிறார்கள். வன்முறையாளர்கள் பழங்குடியின பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொலை செய்து இருக்கிறார்கள்.  இதனால் பயங்கரவாதிகளை ஒழிக்க கோரி மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். முதலமைச்சர், உட்பட 13 எம்.எல்.ஏ.க்கள் வீடுகளுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.

இதனால்  ஜிரி பாம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் சட்டம் அமல்படுத்தப்படுகிறது. எனவே மணிப்பூரில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலை கட்டுப்படுத்த   அமித்ஷா  அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த மாநிலத்தில் ஆளும் பாஜக அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது.

அங்கு நிலவும் அசாதாரண சூழலை கட்டுப்படுத்த வேண்டும் எனபது நடுநிலை வாதிகளின் கோரிக்கையாக இருக்கிறது.