இந்த 10 மாவட்டங்களில் செய்யவிருக்கும் பேய் மழை! கடுமையாக எச்சரித்த சென்னை வானிலை ஆய்வு மையம்!

Photo of author

By Sakthi

தமிழ்நாட்டில் எதிர்வரும் 23 ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் 6 மாவட்டங்களுக்கும் வரும் 22ஆம் தேதி இந்நான்கு மாவட்டங்களுக்கும் மிக கனமழை காண எச்சரிக்கையாக ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, இலங்கை மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியிருக்கும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது.

சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, விருதுநகர், திருநெல்வேலி, மதுரை ,சேலம், திருச்சி, பெரம்பலூர், கடலூர், அரியலூர், உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் நாளைய தினம் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப் பட்டிருக்கிறது.

நாளை மறுநாள் அதாவது இருபத்தி ஒன்றாம் தேதி திருச்சி, கரூர், ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதேபோல சேலம், நாமக்கல், நீலகிரி, கோவை, திருப்பூர், கள்ளக்குறிச்சி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை மறுதினம் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்து இருக்கிறது.

எதிர்வரும் 22ஆம் தேதி கள்ளக்குறிச்சி, தர்மபுரி, நாமக்கல், சேலம், உள்ளிட்ட மாவட்டங்களிலும் மிக கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கடலூர், கரூர் ,விழுப்புரம், கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர், உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதேபோல சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று அந்த அறிவிப்பில் சொல்லப்பட்டு உள்ளது. இதில் மிக கனமழை என்பது ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை.