அதிர்ச்சி மேல் அதிர்ச்சி! இன்று முதல் உயருகிறது பால் விலை!

0
153

உலகிலேயே மிகப்பெரியளவில் பால் உற்பத்தியை செய்யும் நாடாக இந்தியா இருந்து வருகிறது. இந்தியாவின் முன்னணி பால் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமாக குஜராத் மாநிலத்தை தலைமை இடமாகக் கொண்ட அமுல் நிறுவனம் இருக்கிறது. இந்த நிறுவனத்தில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் உறுப்பினர்களாக இருந்து வருகிறார்கள்.

விவசாயிகளிடமிருந்து பால் கொள்முதல் செய்து அதனை பல்வேறு பால் பொருளாக தயார் செய்து உள் நாடுகளில் விற்பனை செய்து வருவதோடு வெளிநாடுகளுக்கும் அமுல் நிறுவனம் ஏற்றுமதி செய்து வருகிறது. நாடு முழுவதும் மிகவும் பிரபலமான அமுல் நிறுவனம் பால் விலையை அதிகரித்திருப்பது சாமானிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

புதிய விலை பட்டியலினடிப்படையில் ½ லிட்டர் பால் இனி 35 ரூபாய்க்கும், அமுல் தாசா 25 ரூபாய்க்கும், அமுல் சக்தி 28 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் என்று சொல்லப்படுகிறது. அதைப்போல அமுல் போல் மதர் டெய்ரி என்ற நிறுவனமும் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களின் விலையை அதிகரித்திருக்கிறது.

மதர் டெய்ரிஃபுல் க்ரீம் பால் ஒரு லிட்டர் இனிவரும் காலங்களில் 61 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்படும், டோன்ட் பால் ஒரு லிட்டர் 51 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும், டபுள் டோன்ட் பால் 45 ரூபாய்க்கு இனிவரும் காலங்களில் விற்பனை செய்யப்படும் எனவும், சொல்லப்படுகிறது. பால் விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படும் பால் ஒரு லிட்டருக்கு 48 ரூபாய் என்ற விலையில் விற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleஅதிரடியாக குறைந்தது தங்கத்தின் விலை! வெள்ளியின் விலையும் சரிவு!
Next articleலவ் டுடே!.. இயக்குனரும் இவரே நடிகரும் இவரே!.. சூப்பர் போங்க..