ஒரு பக்கம் லாக் டவுனில் அவதியுறும் மக்கள்! மறுபக்கம் ஊரடங்கை கொண்டாடிய நடிகர்!
கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு விதிமுறைகளை செயல்படுத்தி வருகின்றன.மேலும் பல அரசாணைகளை பிறப்பித்துள்ளது நாம் அறிந்ததே.பகுதி நேர லாக்டவுன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுநேர லாக்டவுன் போன்றவற்றை செய்தாலும் சமீபத்திய நாட்களில் கொரோனா நோய் தொற்றின் பரவல் நாடு முழுவதும் 4 லட்சத்தை கடந்து செல்கிறது.மருத்துவ மனைகளில் நிகழும் ஆக்சிஜன் தட்டுப்பாடு, இடவசதியின்மை போன்றவற்றின் காரணமாக நம் கண் எதிரிலேயே பலர் நம்மை விட்டு நீங்கி நம் மனதில் நீங்கா இடம் பிடிக்கின்றனர்.
இந்நிலையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா நோய் தொற்றின் காரணமாக தொற்றின் வேகத்தை குறைக்கவும், பரவாமல் தடுக்கவும் மீண்டும் தமிழக அரசு ஊரடங்கு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.எப்படி பரவுகிறது என்று தெரியாமலேயே பரவும் தன்மை கொண்ட இந்த வைரஸால் மக்கள் பொருளாதார நிலையில் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். மருத்துவர்களும் இந்த தொற்றின் காரணமாக மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர்.
தற்போது புது முதல்வராக பொறுப்பேற்று உள்ள திரு மு.க.ஸ்டாலின் அவர்களும் மே மாதம் 10 ம் தேதியில் இருந்து 24 ம் தேதி வரை இரு வாரங்களும் தமிழகம் முழுவதிலும் இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவித்தார்.
இந்த அறிவிப்பை பார்த்து நடிகர் சித்தார்த் அவர்களும் முழு ஊரடங்கு அமலாக்கம் வரவேற்க்கதக்கது என ட்வீட் செய்துள்ளார்.மேலும் அவர் இந்த பதிவில் நாம் பெரும் ஆபத்தில் இருக்கிறோம். கோரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நாம் இணைந்து வெற்றி பெறுவோம் எனவும், மருத்துவர்களுக்கு நாம் ஆதரவு அளிப்போம் எனவும், பாதுகாப்பாக இருப்பதும் மற்றவர்களை பாதுக்காப்பாக வைத்துக்கொள்வதும், நம் சமுதாய கடமையாகும்.இதனை அனைவரும் கடைபிடிப்போம் என்று ட்வீட் செய்துள்ளார்.