தமிழக முழுவதும் நாளை…! சுகாதாரத் துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

Photo of author

By Sakthi

நாட்டில் நோய் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக கடந்த வருடம் ஜனவரி மாதம் 16ஆம் தேதி தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பமானது. தற்போது 12 வயதிற்கும் மேற்பட்ட எல்லோருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 2 தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் நிறைவடைந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் தமிழகத்தில் எல்லோரும் விரைவாக தடுப்பூசி செலுத்த வாரம் தோறும் சனிக்கிழமைகளில் ஐம்பதாயிரம் பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து 1 லட்சம் பகுதிகளில் சிறப்பு நோய்த்தொற்று தடுப்பூசி முகாம் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் கடந்த மே மாதம் 8ம் தேதி மற்றும் ஜூன் மாதம் 12ஆம் தேதி உள்ளிட்ட நாட்களில் தமிழ்நாடு முழுவதும் அத்தகைய முகாம்கள் நடந்தது.

இந்த சூழ்நிலையில், தமிழ்நாடு முழுவதும் நாளைய தினம் 1 லட்சம் இடங்களில் 31 ஆவது சிறப்பு நோய் தொற்று தடுப்பூசி முகாம் நடைபெற இருக்கிறது.

இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது, நாளை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரையில் 31 வது சிறப்பு நோய் தொற்று தடுப்பூசி முகாம் நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் இதுவரையில் 11.45 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன என தெரிவித்திருக்கிறார்கள்.

மேலும் முதல் தவணை தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாதவர்கள், குறிப்பிட்ட காலத்தில் 2வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், 2 தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் நிறைவடைந்த உடன் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், என்று சுமார் 1.45 கோடி அதிகமானோர் இருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

தற்போதைய சூழ்நிலையில், 78.78 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் இருக்கின்றன. பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். தடுப்பூசி முகாம் பணியில் ஈடுபடும் சுகாதாரப் பணியாளர்களுக்கு வருகின்ற 11ஆம் தேதி விடுமுறை வழங்கப்படுகிறது என்று தெரிவித்திருக்கிறார்கள்.

ஆனால் அன்றைய தினத்தில் வழக்கமான தடுப்பூசி மையங்கள் செயல்படாது அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறும் என்று தெரிவித்து இருக்கிறார்கள்.