மக்களே நோட் பண்ணிக்கோங்க.. இனி ரேஷன் பொருட்களுக்கு தனி ரூட்.. வந்தது கட்டுப்பாடு!!
தமிழக ரேஷன் கடைகளில் பொது விநியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பல்வேறு பொருட்களை கள்ள சந்தையில் விற்று லாபம் பெறுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளது.மேலும் இப்படி கடத்தப்படும் பொருட்கள் தமிழகம் மட்டுமின்றி கேரளா,ஆந்திரா,கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில்
இறக்குமதி செய்யப்பட்டு மிக குறைந்த விலையில் உள்ளூர் சந்தைகளில் விற்கப்படுகிறது எனவும் புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக கடந்த ஒரு மாத கால அளவில் பல புகார்கள் பெறப்பட்டு அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது.இது ஒருபுறம் இருக்க, இந்த கள்ள சந்தை விற்பனையால் தமிழகத்திலுள்ள பொதுமக்களுக்கு கிடைக்க கூடிய அத்தியாவசியப் பொருட்களுக்கான கோதுமை,பாமாயில்,பருப்பு உள்ளிட்டவற்றிற்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.
இதனால் ரேஷன் பொருட்களையே நம்பி வாழும்,பல ஏழை குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.இதனை தடுக்கும் விதமாக தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதன்படி இனி அரசு விநியோக பொருட்களை எடுத்து செல்லும் அனைத்து வாகனங்களிலும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்படும் என குறிப்பிடட்பட்டுள்ளது.இதன் மூலம் வாகனங்கள் செல்லும் (இ-வழித்தடம்)இடங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.இனி வரும் காலங்களில் இது போன்ற திருட்டு ஏற்படாத வகையில் இன்னும் பல திட்டங்கள் நிறைவேற்றப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.